உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறை!

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரீஸ்: சட்ட விதிகளுக்கு புறம்பாக, தேர்தல் நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.ஐரோப்பிய நாடான பிரான்ஸின் அதிபராக 2007 முதல் 2012 வரை இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி, 70. இவர், 2007 தேர்தல் பிரசாரத்திற்கு அப்போதைய லிபியா அதிபர் கடாபியிடமிருந்து நிதி பெற்றதாகவும், அதற்காக வேறு சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவுமு் குற்றம் சாட்டப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v8984yiv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவுக்கு நல்லுறவு ஏற்படுத்த உதவி செய்வதாக கூறி, கடாபியிடம் இந்த நிதி பெற்றதாக, சர்கோஸி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசியல் நோக்கம் கொண்டவை என்று சர்கோஸி மறுத்தார்.ஆனால், கடாபியிடம் சர்கோஸி தரப்பினர் பணம் பெற்றதை, கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் உறுதி செய்தார். இது தொடர்பான வழக்கு பாரீஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி, முன்னாள் அதிபர் சர்கோஸி மீதான சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.முதல் முன்னாள் அதிபர்பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இத்தகைய குற்றச்சாட்டில் சிறை தண்டனைக்கு ஆளாக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வதாக இருந்தாலும், சர்கோஸி சிறையில் இருந்து கொண்டு தான் அப்பீல் செய்ய முடியும் என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தண்டனை விவரத்தை அறிந்ததும், அங்கிருந்த முன்னாள் அதிபர் சர்கோஸி கொந்தளித்து பேட்டி அளித்தார். ''இன்று நடந்திருப்பது, சட்டத்தின் மிக மோசமான ஆட்சியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அவர்கள் நான் சிறையில் தான் படுத்துறங்க வேண்டும் என்று நினைத்தால், நான் அதற்கு தயார்,'' என்றார், சர்கோஸி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mrs. Marie-Thérèse Evariste
செப் 26, 2025 02:49

I dont understand at all : For example : I ask you for as much money as I want, and you give it to me without any question. It is a matter between us, negotiable. I spend that money as I wish. I am not obligated to give any account of the reception of the amount and the type or manner of the expenses to anyone excepting you, who had given me. Am I correct? Its the same between Sarkozy and his Kadhafi, also. So why do they say it is illegal to use Lebanese money during his Presidential election propagations by Sarkozy and it constitutes financial corruption of the Lebanese state by Sarkozy ? Sarkozy did not ask Khadafi to commit financial corruption of his country, and Kadhafi was not forced to do so also. In this situation, Sarkozy had the right to approach for financial aid / ask for financial help to anyone and the other party had full rights either to give or to refuse. But, without refusing, here, Khadafi had helped Sarkozy financially. Whatever it would had been, here, its Khadafi + who might had been punished and not Sarkozy. Fortunately or unfortunately, Khadafi is dead killed. Therefore, today, this complaint in the court is no longer valid because between the lender and borrower, one person is no more on this earth, living. Let us remember that after her death, Miss Jaya Lalithas case was closed definitively. This rule is applicable for all of us all over the world. In my opinion, all these judges should be judged by the judges themselves, and they should be punished and be put behind the bars.


Iyer
செப் 25, 2025 20:52

பிரான்ஸ் அதிபர் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதற்க்கே சிறை செல்கிறார். இந்தியாவில் - லாலு மாநிலத்தின் கருவூலத்தையே கொள்ளை அடித்தும் இன்று MEDICAL GROUNDS வெளியே உலவிக்கொண்டு அரசியல் செய்துவருகிறார் ஆவணங்களுடன் நிரூபணம் காண்பித்தும் தாய் சேய் ஜோடி - NATIONAL HERALD கொள்ளையில் இன்னும் தண்டிக்கப்படவில்லை.


தாமரை மலர்கிறது
செப் 25, 2025 18:54

இங்கே ஸ்டாலினும் ராகுலும் வெளியே சுத்திகொண்டு இருக்கிறார்கள்.


SANKAR
செப் 25, 2025 20:05

Ajith Pawar kooda!


முக்கிய வீடியோ