உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டெலிகிராம் செயலி நிறுவனர் கைதுக்கு வலுக்கும் கண்டனம்: விடுவிக்கவும் கிளம்பியது கோரிக்கை!

டெலிகிராம் செயலி நிறுவனர் கைதுக்கு வலுக்கும் கண்டனம்: விடுவிக்கவும் கிளம்பியது கோரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது; விடுவிக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.ஐரோப்பிய நாடான பிரான்சில், போதை பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டில், அந்த செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தனிமனித சுதந்திரம்

இது தொடர்பாக அமெரிக்க அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழக்கறிஞருமான ராபர்ட் கென்னடி ஜூனியர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'துரோவ் கைது செய்யப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது. சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான காலங்கள்

எக்ஸ் சமூக வலைதள உரிமையாளரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' மீம்ஸ் போட்டவர்களை ஐரோப்பிய சிறையில் அடைக்கிறார்கள். பிரான்சில் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரியை கைது செய்கிறார்கள். 'மீம்ஸ்'களை தடை செய்ய அயர்லாந்து முயற்சிக்கிறது. எக்ஸ் சமூகவலைதள நிறுவனத்தை பிரேசில் நாட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். எக்ஸ் வலைதள பதிவுகளை ஆஸ்திரேலியாதணிக்கை செய்ய முயற்சிக்கிறது. வரும் 2030ல் ஐரோப்பாவில் மீம்ஸ் போடுபவர்களை தூக்கிலிடும் சூழல் கூட உருவாகலாம். இது ஆபத்தான காலங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

சிவப்புக் கோடு

ரம்பிள் (Rumble CEO) தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் பாவ்லோவ்ஸ், ''டெலிகிராமில் பதிவுகளை டெலிட் செய்தததற்காக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவைக் கைது செய்வதன் மூலம், சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளனர்' என பதிவிட்டுள்ளார். கைதான துரோவை விடுவிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 27, 2024 11:26

சமூக ஊடகங்களில் வரும் மருத்துவ சம்பந்தப்பட்ட செய்திகளை கண்டிப்பாக தணிக்கை செய்ய வேண்டும். பல தவறான மருத்துவம் நோய் சம்பந்தப்பட்ட செய்திகள் வருகின்றன. முக்கியமாக சர்க்கரை நோய் சம்பந்தப்பட்ட செய்திகள் புற்றுநோய் இதய நோய்கள் போன்ற முக்கிய மருத்துவ குறிப்புகள் கண்டிப்பாக தணிக்கை செய்ய வேண்டும். தவறான தகவல்களை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


r ravichandran
ஆக 26, 2024 13:28

கருத்து சுதந்திரம் என்பது கட்டற்றது அல்ல. அதுவும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டது தான்.


kulandai kannan
ஆக 26, 2024 13:19

வெள்ளைக்காரன் எப்போதும் ஊருக்கு உபதேசி.


சமீபத்திய செய்தி