உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசியலும் இல்லை; ஒரு வெங்காயமும் இல்லை: அதிபருக்கு வந்தது அப்படியொரு கோபம்!

அரசியலும் இல்லை; ஒரு வெங்காயமும் இல்லை: அதிபருக்கு வந்தது அப்படியொரு கோபம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: 'டெலிகிராம் தலைமை நிர்வாகி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டது, அரசியல் முடிவு இல்லை' என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.ஐரோப்பிய நாடான பிரான்சில், போதை பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டில், அந்த செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, கைது செய்யப்பட்டார்.துரோவ் கைது செய்யப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது. சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இது தொடர்பாக, இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருகிறது.

அடிப்படை உரிமை

கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை பாதுகாப்பதில், பிரான்ஸ் அரசு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. அது அப்படியே இருக்கும். சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டில் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நீதித்துறை

முழு சுதந்திரத்துடன், சட்டத்தை அமல்படுத்துவது நீதித்துறையின் கையில் உள்ளது. டெலிகிராம் தலைவர் துரோவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது எந்த வகையிலும் அரசியல் முடிவு அல்ல. இந்த விவகாரத்தில் நீதிபதிகள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kulandai kannan
ஆக 27, 2024 21:26

இதையே இந்திய அரசு செய்திருந்தால்?


P. VENKATESH RAJA
ஆக 27, 2024 15:14

உப்ப தின்னவங்க தண்ணி குடிச்சு தா ஆகணும். வெளியிடாமல் சட்ட விதிமுறைகளை பின்பற்றியதும் செயல்படவில்லை இதனால் அதை நிர்வாக இயக்குனர் துரோவை கைது செய்வதில் எந்த தவறும் இல்லை


புதிய வீடியோ