உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்

சிங்கப்பூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயங்களில் ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து 8 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மார்ஸலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் நவம்பர் 2 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஸ்ரீ முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. 11.15 மணிக்குக் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று இரவு 7 மணிக்கு ஏராளமான பக்தப் பெருமக்கள் பங்கேற்ற கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணமும் 7.30 மணிக்கு சத்ரு த்ருஸதி அர்ச்சனையும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சிகளாக நடந்தன. 8.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. நவ. 8 ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் பிரமுகர் ஸகி முகம்மது தீபாவளி ஒளியூட்டு விழாவைத் துவக்கி வைத்தார். மின்னொளியில் பல ஆலயங்கள் ஜொலிக்கிறது. சுரேஷ்குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக்குழு சத்தீஸ் போன்றவர்களின் அர்ப்பணிப்புச் சேவையால் அருள் வெள்ளமும் ஒளி வெள்ளமும் சூழப் பிரகாசித்துக் கொண்டுள்ளது. திருக்கல்யாண வைபவம் ஈறாகப் பல்வேறு நிகழ்வுகளிலும் திரளாகப் பங்கேற்குமாறு ஆலயம் திருப்பணி குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.

நமது செய்தியாளர் : வெ.புருசோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 03, 2024 09:05

வெளிநாட்டில் நடக்கும் ஹிந்து மத ஆன்மிக விழா நடப்பது மகிழ்ச்சி. இந்திய திருநாட்டில் குறிப்பாய் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள இங்கு நடக்கும் விழாக்களை பிரகாசப்படுதில்லை என்று திடமாய் உள்ளனர். எல்லாவற்றையும் அவசியம் இல்லை. வைணவ சிவா ஆலயங்கள் திருமலை திருவரங்கம் காஞ்சிபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிதம்பரம் பழனி திருத்தணி போன்ற ஆலயங்களில் நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகள் வருவது நல்லது. தினமலரில் வருவது மகிழ்ச்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை