உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கையெழுத்தானது காசா அமைதி ஒப்பந்தம்

கையெழுத்தானது காசா அமைதி ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கெய்ரோ: காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து போட்டார்.இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.இதில் பங்கேற்பதற்காக டிரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
அக் 14, 2025 03:50

ஹமாஸ் கோமாளிகள் இனியாவது புத்தி வந்து திருந்துவார்களா என்றால் நிச்சயம் இல்லை. தீவிரவாதத்தை போதிக்கும் மதம் மாறவேண்டும். இல்லை என்றால் நிரந்தரமாக அழிவுதான் தொடரும்.


Ramesh Sargam
அக் 14, 2025 01:41

இனி வரும்காலத்தில் போரிட நினைக்கும் நாடுகள் இவரை அணுகி, இவர் அனுமதிபெற்று போரை துவங்கவேண்டும். ஒருவேளை இவரின் அனுமதி மறுக்கப்பட்டால் போர் கூடாது. போர் மூள்வதற்கு முன்பே அமைதி. நோபல் அமைதி பரிசு அவருக்கே.


சுந்தர்
அக் 13, 2025 23:52

2026 நோபல் பரிசு ட்ரம்ப் க்கு குடுக்கலனா நடக்கிறதே வேற...


Senthoora
அக் 14, 2025 06:31

இந்தியாவில் உண்மை சாதனையாளர்களுக்கு, அவர்கள் இறந்தபின் தான் பலருக்கு கொடுத்திருக்கிறாங்க . டிரம்ப் ஐயாவின் மறைவுக்கு பின் நோபல் கிடைக்கலாம், இந்தியாவே பரிந்துரைக்கும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 14, 2025 10:34

ஆமாம் ஆமாம்