உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி.,யில் ஹிந்துக் கோவிலில் இனவெறி வாசகம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

ஆஸி.,யில் ஹிந்துக் கோவிலில் இனவெறி வாசகம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் பக்தர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மெல்போர்னின் போர்னியா பகுதியில் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிவப்பு பெயின்ட்டில் இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர்.மேலும், அந்த பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் இக்கும்பல் இதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்துக்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல், எங்களது அடையாளம், வழிபாட்டுக்கான உரிமை மற்றும் மத சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டதாக உணர்கிறோம் என தெரிவித்துள்ளன.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சண்முகம்
ஜூலை 25, 2025 00:33

குஜராத் மக்களின் குரு சுவாமி நாராயணை வழிபடும் தலம் இது. ஒரு ஓரத்தில் ராமர், கிருஷ்ணர் சிலையும் இருக்கும். ஆஸைதிரேலியா தவிர, கனடா, ஐரோப்பாவிலும் சுவாமி நாராயனண் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன.


Palanisamy T
ஜூலை 24, 2025 22:55

மற்ற ஊர்களில் இனவெறி, தாக்குதல்கள் நடந்தால் அப்படியே எழுதுகின்றோம். படிக்கின்றோம். ஒருவேளை தமிழகத்தில் இப்படி நடந்துவிட்டால் நடந்த உண்மையை அப்படியே எழுதமுடியுமா? கேட்டால் மதச் சார்பற்றக் கொள்கையை மதிக்கவேண்டும் மற்ற மதங்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்கின்றார்கள். தமிழகத்தில் குறிப்பாக பொறுப்பற்ற சில ஆளும் கட்சி தலைவர்களால் ஹிந்துக்களின் மனம் அடிக்கடி புண்படுவதை தட்டிக் கேட்க எந்த நாதியுமில்லை. இந்த பொறுப்பற்ற தலைவர்களுக்கு அப்படிப் பட்ட தைரியம். மற்ற ஆட்சியாளர்களும் இதை கொஞ்சமும் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். பொதுவாக பெரும்பாலான இந்துக்களும் இதைப் பற்றி இன்றும் அக்கறைக் கொள்வதாக கொள்வதுமில்லை. இந்த நிலை மாறி நாளையாவது நல்ல மாற்றங்கள் மக்களிடம் வரவேண்டும். அரசுதான் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களிடம் நல்ல மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.


Sivashankar S
ஜூலை 24, 2025 20:06

மதத்தை வைத்து மக்களை கொலை புரிவது பாலைவன வெறியர்கள் அல்லவ? ஹிந்துக்கள் எல்லா மதத்தையும் மதிக்கும் நல்ல எண்ணம் கொண்டவர்கள். பாக்கிஸ்தான்,பங்களாதேஷ் நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் நிலைமை என்ன? சின்னஞ்சிறு பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்க படுகிறார்கள் .ஆண்கள் கொல்லப்படுகிறார்கள்.7ம் நூறாண்டு மடமையம் முட்டாள்தனமான மூர்க்கமும் மனிதநேய மற்ற இன வெறியர்களாக ஆகிவிட்டது.


Nava
ஜூலை 24, 2025 19:50

உலகத்துக்கே ஒரே கடவுள் தான் என்று பாசிசமாக அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறும் ஏற்றுக்கொள்ள மறுப்பவரை முடித்து விட சொல்லும் மதத்தை கடைப்பிடிப்பவரின் கருத்து வேறு எப்படி இருக்கும்


sridhar
ஜூலை 24, 2025 19:18

பதிலுக்கு நாமும் இங்கே அவர்கள் மதத்து தலங்களை ....


nisar ahmad
ஜூலை 24, 2025 17:56

மதத்தை வைத்து வியாபாரம் செய்யும் சங்கிகூட்டம் பஜகவின் செயலாக இருக்குகேக்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூலை 24, 2025 16:52

திராவிட நாதாரிகள் சைலண்ட் .


Kasimani Baskaran
ஜூலை 24, 2025 16:34

காட்டான்கள். ஒருகாலத்தில் சிறைக்கைதிகளாக இருந்தவர்கள் என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறார்கள்.


Nachiar
ஜூலை 24, 2025 16:20

கனடாவில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பல காலிஸ்தானிகளால் இந்துக்களுக்கு எதிராக நடந்தவை. அனால் இவற்றுக்கு எதிரான சட்ட பூர்வ நடவடிக்கை மிகக் குறைவு. அதட்க்கு முதல் காரணம் சொரணை கம்மி. இரண்டாவது ஒருமித்து வாக்கு போடுவதில்லை. நாம் விழிக்கும் வரை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். நாம் எல்லாம் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். ஜெய் ஹிந்.


sankaranarayanan
ஜூலை 24, 2025 16:01

திராவிட மாடல் அரசின் குஞ்சுகள் அங்கே சென்றுவிட்டனவா என்றே தெரியவில்லையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை