உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உடன் நல்ல உறவு; பிப்ரவரியில் அமெரிக்கா வருகிறார் மோடி; அறிவித்தார் டொனால்டு டிரம்ப்

இந்தியா உடன் நல்ல உறவு; பிப்ரவரியில் அமெரிக்கா வருகிறார் மோடி; அறிவித்தார் டொனால்டு டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா உடன் நல்ல உறவு உள்ளது. பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா வருகிறார் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் கடந்த 20ல் பதவியேற்றார். இந்நிலையில், அவருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'நண்பர் டிரம்ப் உடன் பேசியதில் மகிழ்ச்சி. இரண்டாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்' என குறிப்பிட்டு இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k11k4pxh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (ஜன.,28) புளோரிடாவில் விமான நிலையத்தில், டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வரப் போகிறார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்பாவி
ஜன 29, 2025 06:58

அது ஒண்ணுமில்லை. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்.இடையில் ட்ரேட் டெஃபிசிட் 35 பில்லியன் டாலர் இருக்காம். அதைக் குறைக்க அதிக ஆயுதங்கள் அமெரிக்கா கிட்டேருந்து வாங்கணுமாம். அதுக்குத்தான் ஜீ க்கு அழைப்பு. சீக்கிரம் நல்ல சேதி வரும்.


தாமரை மலர்கிறது
ஜன 28, 2025 20:00

மோடியின் திறமை வெளிப்படுகிறது.


J.Isaac
ஜன 29, 2025 13:00

அதானிக்கு பிரச்சினை இல்லை


அப்பாவி
ஜன 28, 2025 19:06

நல்ல வேளை. அங்கே வறுமையை மறைக்க சுவர் எழுப்பத் தேவையில்லை.


govinda rasu
ஜன 28, 2025 13:49

மோடிஜி முதல்முறை பிரதமர் ஆவதர்க்கு முன் அமெரிக்கா விசா மறுத்த காலம் எங்கே....இன்று ...இந்தியாவுக்கு முதல் மரியாதை ...எத்தனை கடின நேர்மையான உழைப்பு இவரது . ஜெய்ஹிந்..


Sivanantha Raja A
ஜன 28, 2025 13:41

டிரம்ப் இந்தியா வரவில்லை. மோடிஜிதான் அமேரிக்கா போகப்போகிறார்.


J.Isaac
ஜன 28, 2025 11:55

கடந்த முறை டிரம்ப் இந்தியா வந்தார். தொடர்ந்து கொரனா. இந்த முறை வந்தால் ?


veera
ஜன 28, 2025 12:25

நீ கவலை படதே...


திகழ்ஓவியன்
ஜன 28, 2025 12:58

அங்கே ILLEGAL ஆக உள்ளவர்களில் பாதி பேர் குஜராத்திகள் தான் அதான் இவ்வலுவ கரிசனம்


கண்ணன்,இளையான்குடி
ஜன 28, 2025 17:32

நீங்களுந்தான் அவர் பூமிக்கு வரப்போகிறார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் அவர் எப்போ வருவார் என்றுதான் தெரியவில்லை.


தஞ்சை மன்னர்
ஜன 28, 2025 11:28

குஜராத்திகள் தலைவர் என்று சொல்லுங்க அவர்களுடன் நல்ல உறவு என்று வேண்டுமானால் போட்டு கொள்ளுங்கள் அகில இந்திய மக்கள் இவரை பற்றி நன்றாக புரிந்து வைத்து உள்ளார்கள் இவர் தான் சார்ந்த குஜராத்திகள் தலைவராகத்தான் பார்க்கப்படுகிறார் மற்ற மாநிலங்கள் தீவிரமாக தவிர்க்கப்படுகிறது ஒதுக்கப்படுகிறது


N Sasikumar Yadhav
ஜன 28, 2025 12:05

கோபாலபுர கொத்தடிமையான உங்க திராவிட அறிவு புல்லரிக்க வைக்கிறது


veera
ஜன 28, 2025 12:27

இங்கு தான் திராவிட கொத்தடிமைகள். collection, commission, curruption தலைய விரிச்சி போட்டு ஆடுதே... எவன் வருவான்


Prabu.KTK
ஜன 28, 2025 12:28

கோபாலபுர அறிவுகெட்ட கொத்தடிமையே தமிழ் ஒழுங்கா படி இந்தியா உடன் நல்ல உறவு பிப்ரவரியில் அமெரிக்கா வருகிறார் மோடி அறிவித்தார் டொனால்டு டிரம்ப் ஜெய் ஹிந்த்


Mathiyazhagan Kaliyaperumal
ஜன 28, 2025 14:35

சுய சிந்தனை இன்றி செயல்படுகிறீர்கள். இந்தியா இப்பொது தலை நிமிர்ந்து நிற்கின்றது. தமிழகத்தை குடிகார மானிலமாக்கியதைத் தவிர வேறு சாதனை வேதனை இல்லை.


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஜன 28, 2025 17:39

உங்களோட பக்கத்து மாவட்டத்தில் NIA பயங்கர ரைடு நடத்துகின்றார்களாம் அதனால் பாத்து சூதானமாக நகர்வலம் போகாமல் வீட்டில் இருங்க தஞ்சை மன்னரே..


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 28, 2025 11:27

மோடிஜி ஒரு சிறந்த தேச தலைவர் ..அவராலே இந்தியாவின் பெருமை உலகெங்கும் பரவுகிறது. வாழ்க மோடிஜின் அரசு . பாரத மாதா பெருமை கொள்கிறார். வந்தே மாதரம்.


J.Isaac
ஜன 28, 2025 11:58

கள்ளத்தனமாக அமெரிக்காவில் அதிகமாக குடியேறியவர்கள் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களே