உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? கூகுள் சுந்தர் பிச்சை விளக்கம்

இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? கூகுள் சுந்தர் பிச்சை விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.இணையதள தேடு இயந்திரமான கூகுள் தளத்தில், நாம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்று புரிந்துகொண்டு அதற்கான பதில்களை அளிக்கிறது. அதன் பின்னால் மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா அல்லது தொழில்நுட்பமா என்ற சந்தேகம் சாதாரண மக்களுக்கு எப்போதும் இருப்பதுண்டு. உலகின் முக்கிய நபரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விஷயத்தில் இது படித்த அறிவாளிகளுக்கே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் டிரம்பின் படம் வரும் சர்ச்சைதான் அதற்கு காரணம். சில ஆண்டுகளுக்கு முன், கூகுள் தவறான தகவல்களை வழங்குவதாகவும், தன் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டின் நீதித் துறைக்கான குழு விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி ஆஜரான சுந்தர் பிச்சை அளித்துள்ள விளக்கம்: இணையத்தில் தேடப்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் மனிதர்களால் பதில் அளிக்கப்படுவதில்லை.கூகுள் தளம், மக்கள் இணையத்தில் சேர்க்கும், தேடும், பதிவேற்றம் செய்யும் ஆயிரக்கணக்கான 'கீவேர்டு' எனப்படும் வார்த்தைகளை, புகைப்படங்களை ஸ்கேன் செய்து வைத்திருக்கும். பிறகு தேடப்படும் வார்த்தையுடன் தொடர்புடையவற்றை, ஏற்கனவே சேகரித்து வைத்திருப்பதிலிருந்து தொகுத்து வழங்கும்.இது மக்கள் இணையத்தில் என்ன பதிவேற்றம் செய்கிறார்களோ அதையே வெளிப்படுத்தும். கூகுள் சொந்தமாக எந்த கருத்தையும் உருவாக்குவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தேடுதல்கள் நடந்துள்ளது. அவற்றையெல்லாம் எந்த மனிதராலும் தேடி முடிவுகளை வழங்க முடியாது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

KRISHNAN R
செப் 27, 2025 21:16

டிரம்ப் மட்டுமா... இங்கு பலர்...


M.Sam
செப் 27, 2025 20:37

கூகிளின் இலக்கம் சரியானதுதான் கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை புரிந்தவன் பிஸ்தா....


Nathan
செப் 27, 2025 20:24

இரண்டு ட்ரில்லியன் டாலர் அமெரிக்கா இழந்து தோற்று வெளியேறிய ஆப்கானிஸ்தான் போருக்கு காரணமாக அமைந்தது இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடனை. ஒசாமாவை தனது பாதுகாப்பில் வைத்து இருந்த பாகிஸ்தான் இன்று அமெரிக்க அதிபருக்கு நல்லவர்களாக தெரிவது வெட்க கேடானது. இது ட்ரம்பின் அறிவின்மையின் சிறந்த உதாரணம்


V Venkatachalam
செப் 27, 2025 16:07

டமில் நாட்டில் இருந்து திகாருக்கு யார் யார் போவாங்க ன்னு ஒரு லிஸ்ட் போட்டா அது ரொம்ப பெரிசா இருக்கு. அதை கூகுள் சரியா சொல்லுமா? அது மாதிரி சூப்பர் கோர்ட்டில் இருந்து அடாவடி வக்கீல்களை எப்பூடி துரத்தி அடிக்கலாம் ன்னு கேட்டா கூகுள் சரியான வழி சொல்லுமா?


என்றும் இந்தியன்
செப் 27, 2025 15:49

Who is the biggest fool man in the world? Quora 6 answers · 2 years ago Its Donald Trump and Vijay Malia…They are the two fools who dont realize the real meaning of life and respect others are just fools who took ...


venkatarengan.
செப் 27, 2025 15:04

A I மற்றும் அனைத்து தரவுகளையும் மனிதன் தான் கணிணியில் பதிவு செய்கிறான். வரலாறு , சமூக, அரசியல் செய்திகளுக்கு சித்தாந்த அடிப்படையில் தான் பதிவு இருக்கும். திராவிட அரசியல் சிந்தனை கூடுதலாக உள்ளவர்கள் தமிழக பக்தி இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்து கணிணி தேடு பொறியில் பதிவு செய்திருப்பார்களா? தேடு பொறி காட்டுவது அனைத்தும் அறிவியலை தவிர வேத வாக்கல்ல.


Subburamu K
செப் 27, 2025 15:03

Trump synonyms to idiot, lunatic, fool, mental, childish, bake,


s.sivarajan
செப் 27, 2025 14:01

இந்த கமெண்ட்களை பிடித்தால் நமக்கு விளங்குவது என்னவென்றால் உலகளாவிய அளவில் நல்ல அரசியல்வாதிகளை மக்கள் ஒருபோதும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்பதுதான்.


vbs manian
செப் 27, 2025 13:25

என்ன துணிச்சல் இவருக்கு.


Nanchilguru
செப் 27, 2025 13:11

இன்னும் இருவரை சேர்க்கவேண்டும் அந்த லிஸ்டில்


முக்கிய வீடியோ