உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசு பணிகளில் ஆள் குறைப்பு; அமெரிக்காவில் அதிரடி

அரசு பணிகளில் ஆள் குறைப்பு; அமெரிக்காவில் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: “அமெரிக்க மத்திய அரசு பணிகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது,” என, செயல்திறன் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜன., 20ல் அவர் பதவியேற்க உள்ளார். சமீபத்தில், தன் நிர்வாகத்தில் இடம்பெறுபவர்கள் குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன்படி, டி.ஓ.ஜி.இ., எனப்படும் அரசு செயல்திறன் துறையை உருவாக்கிய அவர், அதன் தலைவர்களாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை நியமித்தார். இந்த துறை வெளியில் இருந்து, அரசுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் என டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

புளோரிடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

எலான் மஸ்க்கை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என எனக்கு தெரியாது. நிச்சயம் அவர் உளியை கொண்டு வர மாட்டார். மாறாக ரம்பத்தை எடுத்து வருவார். நாங்கள் இருவரும் இணைந்து, அதை அதிகாரத்துவத்துக்கு எதிராக பயன்படுத்தப் போகிறோம்.குறிப்பாக, மத்திய அரசு பணிகளில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் கொத்து கொத்தாக அகற்றப்படும் நடவடிக்கையை இருவரும் முன்னெடுக்கப் போகிறோம். கடந்த வாரம் நடந்த அரசியல் மாற்றத்தின் அடிப்படையில், நாட்டை முன்னேற்றப் பாதையில் நாங்கள் அழைத்துச் செல்ல போகிறோம். இது புதிய விடியலின் துவக்கம். நம் நாட்டு குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கான புதிய துவக்கம் காத்திருக்கிறது. மக்களின் நிறத்தை பார்த்து இல்லாமல், அவர்களின் திறனை பார்த்து அரசு வேலைகள் வழங்கப்படும்.எங்கள் இலக்கு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, வெளிப்படை தன்மையுடன் நடப்பதே ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
நவ 17, 2024 08:54

விரைவில் அமெரிக்காவிலிருந்து கேரளாவுக்கு நிறைய பேர் பஞ்சம்.பிழைக்க வர வாய்ப்பிருக்கு.


Kasimani Baskaran
நவ 17, 2024 07:28

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் - துடிப்பு மிக்க விவேக்தான் அடுத்த ஜனாதிபதி. சிந்தனையில் தெளிவு, கடும் உழைப்பு விவேக்குக்கு பலன் சேர்க்கும்.


Sriraman Ts
நவ 17, 2024 07:01

எவ்வளவு இந்தியன்ஸ் பாதிக்கப்படுவார்கள்? கவலைக்கிடமாக


Rajarajan
நவ 17, 2024 06:21

நீங்க எப்பவுமே தில்லானா ஆள் ஆச்சே. ஆனா உங்கள பாத்து, எங்க நாடு தான் இதை கத்துக்க மாட்டேங்குது.


அப்பாவி
நவ 17, 2024 05:10

அங்கேயும் வருஷத்துக்கு ரெண்டு கோடி வேலை குடுக்குறோம்னு சொல்லி ஆட்சியைப் புடுச்சிருப்பாங்களோ?


Rpalnivelu
நவ 17, 2024 04:16

இதே மாதிரி நம் நாட்டில் நடந்தால் போலி காந்தி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஏ சி அறையில் கும்மாளமிட்டிறுப்பார்


Venkatesan.v
நவ 17, 2024 03:28

இதுதான் நம்ம ஆளு புத்தி.... இவன் வேலைய காட்ட ஆரம்பிசிட்டான்... விளைவு??? கணிசமான அப்பாவி இந்திய இளைஞர்கள் சுட்டு கொல்ல படுவார்கள்.


Priyan Vadanad
நவ 17, 2024 00:49

சுத்த வெவரமில்லாத ஆளா இருக்கார் ரெண்டு மூணு கோடி வேலை உருவாக்குவோம்னு மொதல்ல சொல்லிப்புட்டு மக்கள் கனவுல இருக்கும்போது இப்படி வேலையில்லாமல் ஆக்குறத விட்டுட்டு நம்ம தலைவர்கிட்டேயிருந்து கத்துக்கிடனும்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 08:49

அறிவுக்குறைவுள்ள திமுக கொத்தடிமையே.. மக்கள் தொகைக்கேற்ப வேலைவாய்ப்புக்களை எந்த அரசாளும் உருவாக்க முடியாது.. சுயதொழில் ஒன்றே தீர்வு ......


புதிய வீடியோ