உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிராண்ட் சுவிஸ் செஸ்: 2வது முறையாக பட்டம் வென்று வைஷாலி சாதனை

கிராண்ட் சுவிஸ் செஸ்: 2வது முறையாக பட்டம் வென்று வைஷாலி சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமர்கந்த்: கிராண்ட் சுவிஸ் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான கிராண்ட் மாஸ்டர் வைஷாலி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2026 ல் நடக்கும் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நடந்தது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் 24 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் சேர்ந்த டன் ஜோங்யியை எதிர்கொண்டார். 11 சுற்று முடிவில் 8 புள்ளிகள் பெற்று வைஷாலி சாம்பியன் ஆனார். இதன் மூலம் இந்த பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் ஏற்கனவே கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் 3வது நபராக வைஷாலியும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை