உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவுக்கு செல்ல முயன்ற நிவாரண குழு நாடு கடத்தல்

காசாவுக்கு செல்ல முயன்ற நிவாரண குழு நாடு கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம் : போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவ, நிவாரணப் பொருட்களுடன் கப்பலில் சென்ற சமூக செயற்பாட்டாளர்கள் 171 பேரை இஸ்ரேல் நாடு கடத்தியது.பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 42 படகுகளில், சுமார் 500 செயற்பாட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர்.இந்தப் படகுகள், பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும். அவர்கள் அனைவரையும் இஸ்ரேலியப் படையினர் சிறைப்பிடித்தனர்.பல ஆர்வலர்கள், இஸ்ரேல் படைகளால் தடுப்புக் காவலில் கொடுமை படுத்தப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கிரெட்டாவை இஸ்ரேலியப் படைகள் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, அவரை அடித்துத் துன்புறத்தியதோடு இஸ்ரேலிய கொடியை முத்தமிடுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பொய்க் குற்றச்சாட்டு என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில், கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 171 ஆர்வலர்கள் கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
அக் 07, 2025 01:50

போரினால் எவ்வளவு பிரச்சினைகள். போரில் ஈடுபட்டிருக்கும் அந்த அந்த நாட்டு தலைவர்கள் சிந்திக்கவேண்டும் அப்படியாப்பட்ட போர் வேண்டுமா என்று. அகங்காரத்துக்கு போரிடுவதால் ஒரு பயனும் இல்லை. பிரச்சினைதான்.


Modisha
அக் 07, 2025 00:57

பாம்புக்கு பால் வார்க்கப்போனவர்கள் கைது .


M Ramachandran
அக் 07, 2025 00:27

இந்த நிவாரண குழுக்கள் பெரும்பாலும் கிண்டி உடை அனுப்பப்படும் கும்பல். இஸ்ரேலாலின் நட வடிக்கை சரியானதென. நம் நாடு போல் கண்டவன்கள் உலேயே நுளைந்து விளை விலைவிக்க முடியாது. இஙகுள்ள ஒரு சிவப்பு நிற குங்குரகு அயல் நாட்டில் போனாய் வீட்டின் ஙஇருப்பவர்களின் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஓதுங்க்கு மிடத்தில் வாய் வைத்து விட்டு அந்த நாத்ததுடன் இங்கு நடு வீட்டில் தொங்க போட்டுக்கிட்டு பாத்திரத்தை நக்குவதற்கு வந்து உட்கார்ந்து விடும். ஒரு சிரிய நாடு தேசபக்தி அதிகம் உள்ள மக்கள் உள்ள இஸ்ரேல் அங்குள்ள அரசியல் கட்சிகள் தேசம் முதல் என்று வாழும் மக்கள் உடைய நாடு. நம் நாட்டில் இதற்கு எதிரிடையயாக போதாதற்கு குட்டையை குழப்பும் நீதி மன்றங்கள். நாம் பெரு மூச்சு தான் விட முடியும்


M Ramachandran
அக் 07, 2025 00:15

இஸ்ரேல் வெகு தைரியமான நாடு. இந்த நிவாரணம் என்ற பெயரில் தூண்டுதல் வேலைய்யகலிய்ய செய்வார்கள். யாதென இந்தியா என்றால் உதாவாகரைகல் உடைநேரா போர்க்கொடி தூங்குவார்கள் ஒரு சிவப்பு மத்திய உடனேயே வரிந்து கட்டிக்கொண்டு வரும். உருப்புடா நம் நாட்டின் டெஆஸ விரோத கூட்டத்தை மத்திய அரசால்கூட ஒன்றும் செய்ய முடிய வில்லை. நீதி மன்றங்க்களின் தலையீடு அதிகம். தேச பற்ற்று பத்தி முதலில் அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.


Thravisham
அக் 07, 2025 06:38

முதல்ல பிழையின்றி எழுத கத்துக்குங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை