கினியா அதிபர் தேர்தல் வேட்பாளர் உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
கோனாக்ரி:: கினியா நாட்டின் அதிபர் தேர்தலுக்கான தற்காலிக வேட்பாளர்கள் பட்டியலை: மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில், டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களின் தற்காலிக பட்டியலை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. சுயேச்சையாக போட்டியிடும் தற்போதைய ராணுவ ஆட்சியின் தலைவர் ஜெனரல் மமதி டூம்போயா உட்பட, ஒன்பது வேட்பாளர்களின் தற்காலிக பட்டியலை நேற்று முன்தினம் இரவு உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. இத்தேர்த லில், இரு எதிர்க்கட்சி வேட்பாளர்கள், முன்னாள் பிரதமர் லான்சானா கவுயேட் மற்றும் முன்னாள் அமைச்சர் உஸ்மானே கபா ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கினியாவின் அதிபர் ஆல்பா கொண்டேவின் ஆட்சியை 2021ம் ஆண்டு, ஜெனரல் டூம்போயா தலைமையிலான ராணுவம் கைப்பற்றியது. அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என, தெரிவித்திருந்த ராணுவ ஜெனரல் டூம்போயா, இதில் களமிறங்கியிருப்பது அந்நாட்டின் ஜனநா யகத்தை கேள்விக்குள்ளாகியுள்ளது.