உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் தாக்குதலுக்கு உதவியவர் அமெரிக்காவில் கைது

ஹமாஸ் தாக்குதலுக்கு உதவியவர் அமெரிக்காவில் கைது

லுாசியானா: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2023 அக்.7 முதல் தாக்குதலை நடத்தினர். இதனால் இஸ்ரேல் -- காசா இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. அமெரிக்கா தலையீட்டால் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான முதல் தாக்குதலுக்கு அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் ஹமாசுக்கு உதவியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லுாசியானாவைச் சேர்ந்த மஹ்மூத் அமின் யாகூப் அல்-முஹ்தாதி என்ற பாலஸ்தீனியர் ஆயுதம் ஏந்தி காசா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியதை எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு கண்டறிந்தது. பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் ராணுவப் பிரிவின் செயல்பாட்டாளராக முஹ்தாதி இருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் அமெரிக்க விசா விண்ணப்பத்தில் தான் எந்த துணை ராணுவ அமைப்பிலும் பணியாற்றவில்லை என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் கார் பழுதுபார்ப்பு அல்லது உணவகத்தில் பணியாற்ற அனுமதி பெற்று நுழைந்துள்ளார். அல்-முஹ்தாதியின் சமூக ஊடக மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் வாயிலாக ஹமாஸுடன் இணைந்த துணை ராணுவக் குழுவுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. விசா மோசடி மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்க சதி செய்ததற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை