உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேலும் 3 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

மேலும் 3 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: ஹமாஸ் தனது பிடியில் வைத்து இருந்த மேலும் 3 பிணைக்கைதிகளை விடுவித்தது. அதேபோல், இஸ்ரேல் சிறையில் இருந்த 369 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ல் இஸ்ரேலிய ராணுவத்தினரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அது முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் பிறகு அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lfsoup5e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், இஸ்ரேல் ராணுவத்தின் அர்ஜென்டைன் யாரிர் ஹார்ன், சகுயி தெகெல், சாஷா டுரோபோநோவ் ஆகியோர் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் மூலம் ஹமாஸ் பிடியில் இருந்து விடுதலையான இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளது. இன்னும் சிலர் அவர்களின் பிடியில் உள்ளனர் அவர்களை விடுவிக்க முயற்சி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Aravindh
பிப் 15, 2025 21:54

நல்ல செய்தி


Bahurudeen Ali Ahamed
பிப் 15, 2025 16:30

நல்ல விஷயம், போர் நிறுத்த ஒப்பந்தம் சுமூகமாக தொடரவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை