உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா, அமெரிக்க விமான நிலையங்களை ஹேக் செய்த ஹமாஸ் ஆதரவாளர்கள்

கனடா, அமெரிக்க விமான நிலையங்களை ஹேக் செய்த ஹமாஸ் ஆதரவாளர்கள்

வாஷிங்டன்: கனடா மற்றும் அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஹேக் செய்த மர்ம நபர்கள், ஹமாஸூக்கு ஆதரவாகவும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு நிலவியது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த அக்.,10ம் தேதி முதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பங்கு அளப்பரியது. இந்தப் போர் நிறுத்தத்திற்கு உடன்பட மறுத்த ஹமாஸை, அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்தார்.இந்த நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பர்க் சர்வதேச விமான நிலையம், கனடாவின் கெலோனா, விக்டோரியா மற்றும் வின்ட்சர் சர்வதேச விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஹமாஸ் ஆதரவாளர்கள் ஹேக் செய்துள்ளனர். அதில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார் மற்றும் விமானநிலைய அதிகாரிகளின் உதவியுடன் மீண்டும் பொது அறிவிப்பு பலகையை மீண்டும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை