உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரூ.86 கோடிக்கு ஏலம் போன கைப்பை!

ரூ.86 கோடிக்கு ஏலம் போன கைப்பை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரீஸ்: பிரபல பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை, பாரீஸில் நடந்த ஏலத்தில், 86 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில், மிகவும் பழமையான மற்றும் அரிய பொருட்களுக்கான ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த, 'சோத்பீஸ்' நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. மிகவும் பழமையான பொருட்களை சேகரிக்கும், ஒன்பது ஏலதாரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். தொலைபேசி மூலமாக, மிகவும் பரபரப்பாக நடந்த ஏலத்தில், பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக, 1984ல் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை, ஏலம் விடப்பட்டது.1 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 8.6 கோடி ரூபாய்க்கு ஏலம் துவங்கியது.அடுத்தடுத்து ஏலத்தொகை உயர, அடுத்த 10 நிமிடத்தில் ஏலம் முடிந்தது. ஜப்பானைச் சேர்ந்த தனியார் ஏலதாரரும், பழமையான பொருட்களின் சேகரிப்பாளரும், இந்த பையை 10.1 மில்லியன் டாலருக்கு, இந்திய மதிப்பில் 83 கோடி ரூபாய்க்கு பிர்கினின் கைப்பையை ஏலம் எடுத்தார். நம் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்டோர் பிர்கின் கைப்பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
ஜூலை 12, 2025 11:39

இதைவிட அவரின் இன்னும் ஏதாவது முக்கியமான உடையை ஏலம் விட்டிருந்தால் மேலும் பலமடங்கு ஏலத்திற்கு போயிருக்கக்கூடும்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 11:35

சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் பழத்தை ஏலம் விட்டதாக செய்தி. பைத்தியங்கள் எல்லா நாடுகளிலும் உண்டு.


Haja Kuthubdeen
ஜூலை 12, 2025 10:28

லூசா இருப்பானுங்களா...இத்தனை கோடி கொடுத்து ஒரு கை பையை வாங்குறானுங்க..பணத்தை எப்படி செலவு செய்றது என்று தெரியாம மிதமிஞ்சி கொட்டி கிடப்பதே காரணம்.


தியாகு
ஜூலை 12, 2025 07:21

ஏலம் எடுத்தவர் விவரம் தெரியாதவரா இருந்திருக்கார். நம்ம கட்டுமர திருட்டு திமுகவின் உடன்பிறப்பு யாரிடமாவது ஒரு பத்தாயிரம் ரூபாயை கொடுத்திருந்தால் யாருக்கும் தெரியாமல் எங்குமே நிரூபிக்க முடியாதபடி நைசாக அந்த கைப்பையை ஆட்டையை போட்டு கொடுத்திருப்பார்கள். எண்பது கோடி ரூபாய் மிச்சமாயிருக்கும்.


முக்கிய வீடியோ