உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெயில் கொடுமை: சவுதியில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

வெயில் கொடுமை: சவுதியில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெக்கா : சவுதியில் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 1,300 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முஸ்லிம் மக்கள் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு, கடந்த 14ம் தேதி இந்த புனித யாத்திரை துவங்கியது.சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் வெயில் கொடுமை தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கடும் வெப்பத்தால் இந்தியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,100 ஹஜ் பயணியர் இறந்ததாக முதலில் செய்திகள் வெளியான நிலையில், இன்று மாலை வெளியான செய்தியில், 1,300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளது. 83 சதவீதத்தினர் முறையாக பதிவு செய்யப்படவில்லை. போதிய தங்குமிடம், குடிநீர் வசதியில்லாமல் சென்ற சிலர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasudevan Ramasamy
ஜூன் 25, 2024 15:31

Unfortunate. At least from now, let them have a safe journey and complete the trip without any more problems


Vivekanandan Mahalingam
ஜூன் 25, 2024 14:31

நம்ப ஊர்ல இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தா அமெரிக்கா பாகிஸ்தான் கனடா எல்லோரும் கருத்து தெரிவிச்சிருப்பான்னுங்க - மோசமான அரசாங்கம்னு ராவுல் வின்சி லண்டன் ல போய் பேட்டி கொடுத்திருப்பாரு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை