உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் கடும் வெள்ளம்; நிலச்சரிவுக்கு 38 பேர் பலி!

நேபாளத்தில் கடும் வெள்ளம்; நிலச்சரிவுக்கு 38 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 38 பேர் பலியாகினர்.இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: நிலச்சரிவால் உயிரிழப்பு அதிகமாகலாம். கடந்த 30 மணி நேரத்தில் 29 பேரை காணவில்லை. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் காத்மாண்டு பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.40 லட்சம் பேர் வெள்ளத்தாலும், போக்குவரத்து பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, மீட்பு பணியாளர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ரப்பர் படகு மூலம் காப்பாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கனமழை, நாளை காலை வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
செப் 28, 2024 19:29

அடுத்து கேரளம் தமிழ்நாடு அரசுகள் கவனமாக இருக்குமா இல்லையா சென்ற வருடம் போல் அமைச்சர்கள் காணாமல் போய் விடுவார்களா. தனியார் ஓடம் ஓட்டுவார்கள் சம்பாதிக்கட்டும் என்று அமைதியாக கொலாஞ்சர் மற்றும் கொண்டாக பிரதர்ஸ் விடும் ரீலை சொரி TV மற்றும் ஜால்ரா டிவி கலையை வீட்டில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருப்பார்களா?


சமீபத்திய செய்தி