உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென்கொரியாவில் வெளுத்து வாங்கும் கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவில் வெளுத்து வாங்கும் கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: தென் கொரியாவில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.தென்கொரியாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை மேலும் நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் இரண்டு பேர் இறந்தனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.மழை தொடங்கியதிலிருந்து 11 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேப்யோங்கில் ஒரு நிவாரண முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40 வயது நபர் உயிரிழந்தார் மேலும் 24 பேர் சிக்கித் தவித்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nada Rajan
ஜூலை 20, 2025 22:34

படத்தை பார்க்கும் போது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் போல் தெரிகிறது...உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை