உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர் இருவருக்கு உயர் பதவி

அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர் இருவருக்கு உயர் பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் இரு முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இந்தியர்கள் இரண்டு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் - 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5k6bkglx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக டிரம்புக்கு ஆதரவு அளிக்கும் குடியரசு கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருக்கின்றனர். இத்தகைய பிரசாரத்திற்கு மத்தியில், அமெரிக்காவின் இரு முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இந்தியர்கள் இரண்டு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். டி-மொபைல் நிறுவன சி.இ.ஓ.,வாக, சீனிவாஸ் கோபாலன், 55, மால்சன் கூர்ஸ் நிறுவன சி.இ.ஓ.,வாக ராகுல் கோயல், 49, நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அதன் விபரம் பின்வருமாறு: அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான டி-மொபைலில், 55 வயதான சீனிவாஸ் கோபாலன் நவம்பர் 1ம் தேதி சி.இ.ஓ.,வாக பொறுப்பு ஏற்கிறார். ஐஐஎம் ஆமதாபாத்தின் முன்னாள் மாணவரான கோபாலன், தற்போது டி-மொபைலின் சீப் ஆப்ரேட்டிங் ஆபிசராக பணியாற்றுகிறார். தற்போது அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனிவாஸ் கோபாலன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டி-மொபைலின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த நிறுவனம் சாதித்ததைப் பார்த்து நான் நீண்ட காலமாக பிரமித்து வருகிறேன். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது போல் வேறு யாரும் செய்ய சாத்தியமில்லை. இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.மால்சன் கூர்ஸ் நிறுவன சி.இ.ஓ.,வாக ராகுல் கோயல், 49, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 1ம் தேதி சிஇஓவாக பொறுப்பு ஏற்கிறார். இவர் மால்சன் கூர்ஸ் நிறுவனத்தில் 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அமெரிக்காவில் வணிகப் படிப்புகள் பயில செல்வதற்கு முன்பு, மைசூரில் பொறியியல் பட்டப்படிப்பினை பயின்றார். இவர் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள மால்சன் கூர்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் உயர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

yasomathi
செப் 25, 2025 09:25

டிரம்ப் நம்மை அசிங்க படுத்தி கொண்டே இருப்பது இவர்களுக்கு தெரியுமா. இந்த வேலையை விட்டு விட்டு வர வேண்டும். முடியுமா உங்களால்..


M Ramachandran
செப் 23, 2025 20:45

இனிமேல் நம் நாடு இங்கு சாப்ட்வெர் கம்பெனி கள் பல திறந்து அயல் நாடுகளுக்கு தேராவையான மனித வழங்களை நம் நாட்டிலிருந்து தேவை கேர்ப்ப வேலை செய்ய நம் அரசு வழியாக யிங்இருந்து வேலையை செய்ய ஆர்ட்டர்கள் பெற்று செய்தால் அரசுக்கும் வருமானம்.வேலையை செய்வோருக்கும் எப்போது மமைய்ய வெளியேற்று வார்களோ பயம் காரணமாக தோண்ட்ரும் மனச்சுமை குறையும்


M Ramachandran
செப் 23, 2025 20:37

எதிர்ப்புகள் ஆரம்பித்து விட்டது. விரட்டி அடிப்பார்கள்.அதர்குள் அவர்கள் 60 வயதாய் அடைந்து விடுவார்கள். கிடைத்த பணத்தைய்ய கொண்டு இஙகு வந்து செட்டில் ஆவது தான் உத்தமம். இந்திய அரசு அவர்கள் கொண்டு வரும் பணத்திற்கு வரி களை போட்டு பிடுஙகாமலே இருந்தால் சரி.


joe
செப் 23, 2025 19:49

திறமை சாலிகளுக்கு மதிப்பு கொடுத்தால் சரி .எங்கேயும் எப்போதும் திறமை சாலிகளுக்கு மதிப்பு உள்ளது .


spr
செப் 23, 2025 18:06

பாராட்டுவோம். ஆனாலும், படித்தவர்கள், திறமையுள்ளவர்கள் தேவை எப்போதும் இருக்கும்.


M S RAGHUNATHAN
செப் 23, 2025 17:40

உ ஸ் உபிகளுக்கு செய்தி. அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டம்.நடத்த திரண்டு வாருங்கள். மாசு தலைமை தாங்குவார். சேகர் பாபு உடன் இருப்பார். எனக்கு துபாய் செல்ல வேண்டி இருப்பதால் நான் வரமாட்டேன்.


nagendhiran
செப் 23, 2025 17:36

இந்த செய்தியை நாதக தம்பிகளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்?


sankaranarayanan
செப் 23, 2025 16:57

கூடிய சீக்கிரமே அமெரிக்காவில் திடிரென்று எல்லா நகரங்களிலும் விமானம் கிளம்பால் நின்றுவிடும் மிலிட்ரி விமானங்களும் இதில் அடங்கும் அப்போதுதான் இந்த அதிபர் அடங்குவார் கூப்பிடுங்கள் இந்திய விஞ்ஞானிகளையும் கம்ப்யுட்டர் அறிவாளிகளையும் முன்புபோலெ இருக்கட்டும் என்று வழிக்கு வருவார் என்பது வெகு தொலைவில் இல்லை


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 23, 2025 16:32

அமெரிக்க சாராய கம்பெனிக்கும் நம்ம ஆளுங்கதான் தலைமை என்பது திராவிட மாடலின் வெற்றி. வீரன் பிராண்ட் விஸ்கியுடன் அடுத்து வெற்றி பிராண்ட் பிராந்தியையும் குடித்து கும்மாளம் போடுவோம். திராவிட வெற்றி வீரன் வாழ்க.


Saai Sundharamurthy AVK
செப் 23, 2025 16:02

டிரம்ப்புக்கு இந்நேரம் BP எறியிருக்கும்..!!!


புதிய வீடியோ