உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டனில் சிறந்த பள்ளியாக தேர்வானது ஹிந்து பள்ளி

பிரிட்டனில் சிறந்த பள்ளியாக தேர்வானது ஹிந்து பள்ளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனின் ஹாரோவில் இயங்கி வரும் ஹிந்து பள்ளிக்கு, அனைத்து பிரிவுகளிலும் சிறந்த பள்ளி என்ற உயரிய தரவரிசையை அந்நாட்டு கல்வி கண்காணிப்பு அமைப்பு வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஹாரோவில், அந்நாட்டின் அரசு நிதியுதவி பெறும் ஹிந்து பள்ளியாக, கிருஷ்ணா அவந்தி ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இது, கல்வித்தரம், தலைமைத்துவம், மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த மதிப்பீட்டை பெற்ற சிறந்த பள்ளி என அந்நாட்டின் கல்வி தரக்கட்டுப்பாட்டு அமைப்பான 'ஆப்ஸ்டெட்' அறிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஹாரோவில் துவங்கப்பட்ட இப்பள்ளி, பிரிட்டனின் தேசிய பாடத்திட்டத்துடன், யோகா, சமஸ்கிருதம், தியானம், ஹிந்து கலாசாரம் மற்றும் ஆன்மிக மரபுகளை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ