உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்து கோவில் சேதம்: சிலைகளை உடைத்து அட்டூழியம் செய்த கும்பல்!

வங்கதேசத்தில் ஹிந்து கோவில் சேதம்: சிலைகளை உடைத்து அட்டூழியம் செய்த கும்பல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கோவிலில் இருந்த 7 சிலைகள் சேதம் அடைந்துள்ளன.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கத் துவங்கியது. ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதும், ஹிந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது. தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கிறது. ஹிந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்தி இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=33stp2sh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், கோவிலில் இருந்த 7 சிலைகள் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன. துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினோம். இந்த விவகாரம் தொடர்பாக ஷிம்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான ஹபிபுர் ரஹ்மான் என்பவரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கோவிலில் சிலைகள் சேதம் அடைந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஹிந்து கோவிலை சேதப்படுத்திய, சம்பவத்திற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ManiMurugan Murugan
செப் 21, 2025 23:44

ManiMurugan Murugan இந்துக்கள் வங்க தேசத்தில் சிறுபான்மையினர் என்பதால் தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது அனைத்து நாட்டிலும் அனைத்து மதத்தினரும் உள்ளனர் இவ்வாறு மத வேறுபாட்டை வளர்ப்பது அந்த நாட்டிற்கு கேடாக முடியும்


nisar ahmad
செப் 21, 2025 23:09

இங்கு ஆர்எஸ்எஸ் பஜ்ரங்தள் மற்றும் நூற்றுக்கணக்கான ஹிந்து தீவிரவாதிகள் மசூதி மதரசா தர்கா என்று தினம் தாக்கி சேதம் அல்லது டைக்கிறார்கள் அதை வைத்து பார்த்தால் அங் எப்பவாவது ஒன்றிரண்டு சம்வங்கள் நடக்கிறது அவ்வளவுதான் இங்கு தாக்குபவர்களை அரசு பாதுகாக்கிது அங்கு கைது செய்கிறது இங்கு பஜக இந்துத்துவா அராஜக ரசே மசூதி மதரசாக்களை புல்டோசர் கொண்டு உடைக்கிது அங்கு ரசு அதை செய்வதில்லை அதுவரை சத்தோஷப்பட வேண்டும்.


Kudandhaiyaar
செப் 21, 2025 21:49

இந்து கோவில் என்றாலே இந்தியா சம்பந்தப்பட்ட என்று பொருள். அப்படிருக்க இந்தியாவில் மசூதி சம்பந்தப்பட்ட பகுதிகளில் இவ்வாறு நடந்தால் என்ன சொல்வார்கள்.அங்கு நாம் சிறுபான்மையினர்,இங்கு அவர்கள் சிறுபான்மையினர். அல்லது ஒரு கால கெடு நிர்ணயித்து இந்துக்கள் அனைவரும் இந்தியா திரும்பி வர அழைக்கவேண்டும் அதேபோல, நாமும் இங்கிருக்கும் சிறுபான்மையினரை அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பிவிடலாம் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களின்படி.


Gnana Subramani
செப் 21, 2025 21:47

மசூதியை இடிப்பதாக சொல்லி இருந்தால் இங்கே இருந்து ஆதரவு கிடைத்து இருக்கும்


kumarkv
செப் 21, 2025 21:14

அந்த ஜாதி பாவிகளை இந்த உலகித்திலிருந்து ஒழிக்கவேண்டும்.


Rathna
செப் 21, 2025 20:28

மூர்க்க காட்டுமிராண்டிகள்.


nisar ahmad
செப் 21, 2025 23:12

ஒரு கோவில் உடைத்ததால் மூர்க காட்டு மிராண்டிகள் இங்கு திணம் திணம் நூற்றுக்கணக்காண மசுதிகளை உடைப்பவர்கள் காட்டு மிராண்டிகளுக்கு அப்பப. காட்டு மிராண்டிகள்தானே.கணக்கு சரிதான் ஆனாலும் அங்கு குறைவு தான்.


எஸ் எஸ்
செப் 21, 2025 20:01

காசாவில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து வீணாப்போன சத்யராஜ், திருமா, ஜீவஹிருல்லா போன்றோர் போராட்டம் நடத்துவதாக செய்தி பார்த்தேன். வங்கதேசத்திலும் பெகல்காமிலும் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது போராடபோகிறது இந்த கும்பல்?


karthikeyan
செப் 21, 2025 19:49

தேச துரோகிகள்...இவர்களை வேரோடு வெட்டி ஏறிய வேண்டும்.


Rameshmoorthy
செப் 21, 2025 19:30

Barbaric act


Kumar Kumzi
செப் 21, 2025 17:30

சோத்துக்கு வக்கில்லாம நாசமா போன காட்டுமிராண்டி கூட்டம்


புதிய வீடியோ