உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலில் ஹோலி கொண்டாட்டம்: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

இஸ்ரேலில் ஹோலி கொண்டாட்டம்: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜாபா துறைமுகம்: இஸ்ரேலில் வண்ணத் திருவிழாவான ஹோலி மற்றும் யூத திருவிழாவான பூரிம் ஆகிய இரண்டு விழாக்களையும் ஹிந்துக்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் 3000 பேர் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.ஜாபா துறைமுகத்தில் டெல் அவிவ் நகர நிர்வாகத்துடன் இணைந்து ஹிந்து மிஷன், இந்த இரு திருவிழாக்களை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது.இது நாட்டின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியது. இரண்டு திருவிழாக்களும், வெவ்வேறு மத பாரம்பரியங்களைக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை போன்ற பொதுவான கருப்பொருள் உடன் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வண்ணப் பொடிகளை வீசி அனைவரும் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர்.இஸ்ரேலில் ஹோலி மற்றும் பூரிம் ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவது, இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே வளர்ந்து வரும் கலாசார உறவுகளை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Oviya Vijay
மார் 17, 2025 07:47

எங்கே இந்த திராவிட முட்டுக்கள்...? இன்னுமா 200 பட்டுவாடா ஆகலை


Iyer
மார் 17, 2025 06:54

உலகமே சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் தருணம் இன்னும் சிலநூற்றாண்டுகளில் நடக்கும்.


J.V. Iyer
மார் 17, 2025 04:26

ஹிந்துஸ்தானும், இஸ்ரேலும் ஒன்று சேர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கவேண்டும். ஹிந்துக்களும், யூதர்களும் சேர்ந்தால்தான் இருவருக்கும் விடிவுகாலம், நல்ல எதிர்காலம். .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை