உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானுக்கு எதிரான போருக்கு ஒருநாள் செலவு ரூ. 8,659 கோடி: வெளியான புதிய தகவல்

ஈரானுக்கு எதிரான போருக்கு ஒருநாள் செலவு ரூ. 8,659 கோடி: வெளியான புதிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெரூசலேம்: ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போருக்கு இஸ்ரேல் நாள்தோறும் செலவிடும் தொகை எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்னமும் ஓயவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கும் சூழல் காணப்படுகிறது.இந் நிலையில், போர் தீவிரம் அடைந்து வரும் தருணத்தில், போருக்காக அந்நாடு மேற்கொண்டு செலவு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்நாட்டின் நிதி இழப்பானது, மேலும், மேலும் தாங்க முடியாத அளவுக்கு சென்று விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகர் ரீம் அமினாச் கூறி இருக்கிறார்.அவர் மேலும் கூறியதாவது; இப்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்(இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,659 கோடி) செலவாகிறது. இவை அனைத்தும் ராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறது. முதல் 48 மணி நேர போருக்கு மட்டும் ரூ.12,035 கோடி செலவு பிடித்துள்ளது. வான்வழி தாக்குதல்கள், வெடிமருந்துகள், போர் விமானங்களுக்கு ஆன செலவு தனி. இந்த செலவுகள் அனைத்தும் நேரடியான செலவினங்கள். பொதுமக்களின் உட்கட்டமைப்பு சேதமானது, உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணக்கில் சேர்க்கவில்லை. இவை எல்லாம் மறைமுக செலவினங்கள் என்பதால் முழுமையாக மதிப்பிட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 20, 2025 18:54

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயல்களின் கட்டணத்தை ஒரு பெர்சன்ட் உயர்த்தினால் போதும். காசு அருவிபோல கொட்டும். அப்புறம் என்ன? எல்லாம் உங்கள் செயலிகள்தான். போட்ட காசை ஒருவாரத்தில் அள்ளிவிடலாம். டோண்ட் ஒரி. பி ஹாப்பி. யோசிக்காம சும்மா போட்டுத்தள்ளு இஸ்ரேல்.


Thravisham
ஜூன் 20, 2025 18:46

உலகமுழுதும் இருக்கும் யூதர்கள் மிகப் பெரும் பணக்காரர்கள். அமெரிக்க நாட்டின் மிகப் பெரும் பதவியில் இருப்பவர்கள். அவர்களுக்கு பாதுகாப்புதான் முக்கியம். இரானோ ஓர் கிழ முல்லாவால் நாசமாக்கப் பட்ட ஓர் பிச்சைக்கார நாடு.


ameen
ஜூன் 20, 2025 21:06

பாவம் அந்த நாடு அடிச்ச அடியில் இஸ்ரேல் பிச்சைகார நாடாக மாறிட்டு இருக்குது...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 21, 2025 02:07

என்ன அமீன் எரியுதா?


sankar
ஜூன் 20, 2025 18:41

இது தவறான கருத்து. இன்னும் ஹமாஸ் வசம் பிணை கைதிகள் இருக்கின்றனர் . அவர்களை விடுவிக்க வில்லை. மற்றும் நமது பஹல்கம் போல எத்தனை அப்பாவிகளை ஹமாஸ் கொன்றது ... போரை ஆரம்பித்தது பாலசுதீனியர்கள்தான் ..


Karthik Madeshwaran
ஜூன் 20, 2025 18:07

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் முதலில் போரை தொடங்கியது யார்? அமெரிக்காவின் மூளைசலவையால் இன்று நஷ்டப்பட்டு நிற்பது யார் ? அப்பாவி காசா மக்களை அநியாயமாக இனப்படுகொலை செய்வது யார் ?? கடவுள் இருக்கான் குமாரு. கர்ம வினை கட்டாயம் உங்களை அழிக்கும்.


Haja Kuthubdeen
ஜூன் 20, 2025 18:32

தற்காலமாக அமெரிக்கா மேற்கத்திய நாடுகளின் துனை ஆதரவோடு இஸ்ரேல் ஆட்டம் போடலாம்.ஆனால் காலம் மாறும்..குறைந்தது இன்னும் 50ஆண்டுகள் இதன் ஆதிக்கம் நீடிக்கலாம்.அவ்ளோதான்....


Anand
ஜூன் 20, 2025 17:27

அடி கொடுக்கும் இஸ்ரேலுக்கே இவ்வளவு செலவு என்றால் அதை வாங்கிக்கொண்டிருக்கும் ஈரானுக்கு பாதிப்பு எவ்வளவோ?


Arul vendhan
ஜூன் 20, 2025 17:12

இதனால தான் இந்தியா 2 நாளில் போரை முடித்தது. நம் வளர்ந்து வரும் சமயத்தில் போர் நடந்தால் இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம்.


தஞ்சை மன்னர்
ஜூன் 20, 2025 16:41

வினையை விதைத்து விட்டு தினையை தேடும் கும்பல் - சிவப்பு மாடு கிடைத்து விட்டதா இல்லையா


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 21, 2025 02:08

அதெப்படி உங்க டிசைன் அப்படி


Ramasamy
ஜூன் 20, 2025 16:24

அமெரிக்கா மக்கள் வரிப்பணம்


தஞ்சை மன்னர்
ஜூன் 20, 2025 16:18

புலம்புவதை நீ முதலில் நிறுத்து இதை எப்படி நீயே சேர்த்து கொள்ளுவாய் என்று எங்களுக்கு தெரியும் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களின் இருப்பிடத்தை விட்டு விலகி ஓடுங்கள் இல்லையேல் அடி பலமாக இருக்கும் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வரவைக்க ஈரான் திட்டமிட இருப்பதை செய்திகள் வெளிவருகின்றது, இரேலியர்கள் பல ஆயிரம் முன்பே அகதிகளை போன்றும் நாடற்றவர்களாகவும் ஆக்க பட்டவர்கள் பிரிட்டன் செய்யத தவறு அது புரிந்து கொண்டது பட்டும் விட்டது பட்டு கொண்டும் இருக்கு இப்போது புதிதாக அமெரிக்கா இதும் பட்டு தெரிந்துகொள்ளும் திருத்தி கொள்ளவும் பொது இசுரேல் தடம் தெரியாமல் போகும்


N Sasikumar Yadhav
ஜூன் 20, 2025 16:54

இஸ்ரேலுக்கு இப்படியென்றால் உங்க ஈரானுக்கு எவ்வளவு இன்னும் ஹமாஸ் பயங்கரவாத கும்பலுங்களால் ஏற்பட்ட செலவு எவ்வளவு


Indian
ஜூன் 20, 2025 16:18

அப்படின பொத்திக் கொண்டு இருந்திருக்கலாமே


முக்கிய வீடியோ