உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போதை கடத்தல் கும்பலை பிடிக்க வேட்டை : போலீசார் உட்பட 64 பேர் உயிரிழப்பு

போதை கடத்தல் கும்பலை பிடிக்க வேட்டை : போலீசார் உட்பட 64 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியோ டி ஜெனிரோ: போதை கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்தது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8uzujhnh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து பதிலுக்கு பிரேசில் போலீசார் தாக்குதல் நடத்தினர். இதனால் மோதல் முற்றியது. இந்த தாக்குதலின் போது 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பள்ளிகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித் துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ''இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசு கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும்'' என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KavikumarRam
அக் 29, 2025 11:28

இதே வேட்டையை நமது ராணுவம் நம்ம மாடல் அரசிடம் நடத்த வேண்டும்.


Senthoora
அக் 29, 2025 14:46

முதலில் குஜராத்தில் தான்


சாமானியன்
அக் 29, 2025 10:08

நமது நாட்டில் அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்தால் இந்த மாதிரி வேட்டைகள் சாத்தியமாகும். கடத்துபவனிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை கறக்கும் திராவிடமாடல் அரசு வெறும் தீபாவளி நமத்துப்போன பட்டாசுதான்.


Senthoora
அக் 29, 2025 14:48

அப்போ அதானியின் துறைமுகம், அங்கிருந்துதான் தமிழகம் மற்றமாநிலங்களுக்கு வருது.


Field Marshal
அக் 29, 2025 08:51

டாஸ்மாக் சரக்குகள் போதை வரம்பில் வராதா ?


Ramesh Sargam
அக் 29, 2025 08:26

உலகம் முழுவதும் போதைப்பொருள் விநியோகிப்பவர்களை பிடித்து சுட்டு வீழ்த்த, உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டம் தீட்டி அவர்கள் அனைவரையும் வீழ்த்த வேண்டும். இந்தியாவில் கூட இந்த போதைப்பொருள் விநியோகம் அதிகரித்து விட்டது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் போதைப்பொருள் விநியோகம். போதைப்பொருள் விநியோகிப்பவர்களுக்கு ஆதரவளித்து உதவுபவர்கள் கூட சுட்டு வீழ்த்தப்படவேண்டும்.


Thravisham
அக் 29, 2025 08:50

திருட்டு கழக அயலக அணிக்கு பக்க பலமாக இருக்கும்


nisar ahmad
அக் 29, 2025 09:54

அங்கும் சென்று தன் வேலையை காட்டியுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை