உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அதிபர் டிரம்ப் மீண்டும் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அதிபர் டிரம்ப் மீண்டும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்னையை தீர்த்துக்கொள்ளும். நான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய, டொனால்டு டிரம்ப் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். ''கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்'' என டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துளசி கபார்ட் கண்டனம்!

அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் கூறியிருப்பதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், ஹிந்துக்களை குறிவைத்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு ஆதரவளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஏப் 26, 2025 12:46

உண்மையான ஆதரவு என்னவென்றால், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து நாடுகளும் அவர்கள் நாட்டில் வாழும் பாகிஸ்தானியர்களை உடனே வெளியேற்றவேண்டும்.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 26, 2025 10:48

பிரிவினை வாதி முகமது அலி ஜின்னா உருவாகிய கேடு கெட்ட இஸ்லாமிய பயங்கரவாத மதவாத தேசமான பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் கொண்டு வர பயங்கரவாத எதிர்ப்பு நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சும்மா அறிக்கை விட்டுக் கொண்டே இருக்க கூடாது.


Rajan A
ஏப் 26, 2025 07:57

இனிமேல் அவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருந்தால் போதும்.


Kasimani Baskaran
ஏப் 26, 2025 07:45

கொலீஜியத்தை வைத்து சித்து விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும் இல்லை என்றால் காஷ்மீர் இந்தியாவின் கையைவிட்டு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவு விரைவாக தேர்தல் நடத்தியிருக்க தேவையே இல்லை. நீதிமன்றம் இது போல ஒருபக்கம் வழக்குகளை தேங்கவிட்டு மறுபக்கம் அடிப்படை சட்டம் கூட தெரியாமல் வெட்டி வேலைகளில் ஈடுபடாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது.


புதிய வீடியோ