உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய அதிபருடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை

ரஷ்ய அதிபருடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பை ஒத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'அவருடன் பேசுவதால் எந்த பயனும் இல்லை' என்று விரக்தியுடன் கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 2022 பிப்ரவரியில் போர் துவங்கியது. நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், இன்று வரை நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ரஷ்ய அதிபர் புடினை அலாஸ்காவில் நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார். ஆனால் இதுவரை எதுவும் பயனளிக்கவில்லை; தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் புடபெஸ்டில் புடின் - டிரம்ப் சந்திப்பு நடக்க இருந்தது. அது ஒத்திவைக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்யா உடனடி போர் நிறுத்தத்திற்கு எதிராக இருப்பதாக தெரிவித்தார். புடினுடனான சந்திப்பை ஒத்திவைத்தது குறித்து அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், “நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பயனற்ற சந்திப்பை நடத்த விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chandhra Mouleeswaran MK
அக் 23, 2025 12:41

ஆம்மாம்மா


KOVAIKARAN
அக் 23, 2025 08:30

NATO அமைப்பில் சேரமாட்டோம் என்று ஒரு உறுதிமொழியை உக்ரைன் எழுத்து வடிவத்தில் ரஷ்யாவிற்கு கொடுத்தாலே இந்த போர் ஒரு முடிவுக்கு வந்துவிடும். டிரம்ப் அவர்கள் அதை ஏன் செய்யும்படி உக்ரைனை வலியுறுத்தவில்லை? ஆனால் அவர் அப்படி செய்யமாட்டார். ஏனென்றால், உக்ரைனுக்கு அமெரிக்கா விற்கும் ஆயுதங்களின் விற்பனை பல ஆயிரம் கோடிகள் டாலர்கள் தாண்டும். அந்த வர்த்தக வருமானத்தை இழக்க டிரம்ப் விரும்பவில்லை. உக்ரைன் கூட இந்த விஷயத்தில் மறைமுகமாக போரை நிறுத்த விரும்பவில்ல என்றே எண்ணத்தோன்றுகிறது. எனவே இப்போதுள்ள நிலைமையில், ரஷ்யா உக்ரைன் ஆகிய இரன்டு நாடுகளும், மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் உட்கார்ந்து பேசி போரை நிறுத்த ஒரு நல்ல முடிவிற்கு வருவதுதான் அனைவருக்கும் நல்லது.


Ramesh Sargam
அக் 23, 2025 07:45

ஆம், அந்த நேரத்தில் நான் இந்தியா மீது அடுத்து எத்தனை சதவிகிதம் வரி விதிக்கலாம் என்று யோசிப்பேன். சரியான வரிப்பயித்தியம்.


சமீபத்திய செய்தி