உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முழுமையாக குணமடையும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்; புற்றுநோய் பாதித்த வேல்ஸ் இளவரசி உருக்கம்

முழுமையாக குணமடையும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்; புற்றுநோய் பாதித்த வேல்ஸ் இளவரசி உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது கீமோதெரபி சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மகன் வில்லியமன் மனைவி கேட் மிடில்டன்,42 புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தது அரசு குடும்பத்தினரை கவலை அடைய செய்தது. கடந்த ஆண்டு இரு வாரம் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டிருந்த போது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது கீமோதெரபி அளிக்கப்பட்டு வந்தது. இளவரசி கேட் மிடில்டன், தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டது என கூறியிருந்தார்.இந்நிலையில், இன்று (ஜன., 15) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது கீமோதெரபி சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது ;கடந்த ஒரு வருடத்தில் என்னை நன்றாக கவனித்துக் கொண்ட டாக்டர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தேன். கணவர் மற்றும் என்னுடன் அமைதியாக நடந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஒரு நோயாளியாக இருந்த காலம் முழுவதும் நான் பெற்ற அறிவுரைகளும், கவனிப்போம் அதிகமானவை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும். முழுமையாக குணமடைய நிறைய நாட்கள் ஆகும். நான் தற்போது சிகிச்சை முடிந்து நிம்மதியாக இருக்கிறேன். இருப்பினும் முழுமையாக குணமடையும் நாட்களை எதிர்நோக்குகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
ஜன 15, 2025 12:10

மருத்துவ துறையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. எப்படி என்றால் உடன் தேர்வு என்றால் மரணம். இதனை தவிர்த்து நீண்ட நாள் வாழ மருந்துகள் கண்டு உள்ளோம் அதாவது அவஸ்த்தையில் வாழ்கிறோம். இது சரியான வழி இல்லை ரசாயன உரமில்லா செடிகளை இதன் மூலம் கிடைக்கும் உணவுகள் மற்றும் நெல்லி இஞ்சி மிளகு போன்ற கனிகளை சாப்பிடவேண்டும். நீர்நிலைகளை பாழ் படுத்தாமல் இருந்தால் உடல் பாதிப்பு மிகவும் குறையும். பள்ளியில் தினமும் moral பாடம் நடத்தவேண்டும்.


Senthoora
ஜன 15, 2025 09:58

இப்போ அவங்க உங்களுக்கு என்ன முறை, அவங்கெல்லாம் கடவுளை நம்பமாட்டாங்க, எந்த எல்லைக்கும் பணம் இருந்தாலும், பணம் இல்லாமல் இலவசமாக மருத்துவம் பார்க்க உலகில் தலை சிறந்த மருத்துவர்களும், மருந்துகளும் தயாராக எப்போதும் இருக்கு,


subramanian
ஜன 15, 2025 08:32

வேல்ஸ் இளவரசி குணமடைய இறைவனை வேண்டுகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை