உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்: சொல்கிறார் பைடன்

டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்: சொல்கிறார் பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு இருந்தால், டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்,'' என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவ., மாதம் நடந்தது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில், முதலில் ஜோ பைடன் களத்தில் இருந்தார். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களினால் அவர் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிட்டார். ஆனால், இத்தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். வரும் 20ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.இந்நிலையில் அதிபர் பைடன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன் என நம்புகிறேன். அதற்கான சிறந்த வாய்ப்பு என்னிடம் இருந்ததாக நினைக்கிறேன். ஆனால், 86 வயதாகும் நிலையில், மீண்டும் அதிபர் ஆக வேண்டும் என நான் விரும்பவில்லை. இதனால், போட்டியில் இருந்து ஒதுங்கினேன். 86 வயதாகும் நான், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என யாருக்கும் தெரியாது.தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓவல் அலுவலகத்தில் என்னை சந்தித்த டிரம்ப்பிடம், அரசியல் எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டாம் என அவரிடம் கூறினேன். ஆனால், அதற்கு டிரம்ப் எந்த பதிலும் கூறவில்லை. இவ்வாறு பைடன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 09, 2025 11:38

86 வயது ஓய்வு எடுக்க வேண்டிய வயது. காடு வா வா என்று அழைக்கிறது வீடு போ போ என்று கூறும் வயது. இந்த அரசியல் அதிபர் பதவி இதையெல்லாம் விட்டொழித்து விட்டு ஏசுபிரான் மலர் பாதம் நல்ல விதமாக சரணடைய பிராத்தனை செய்யவும்.


ராமகிருஷ்ணன்
ஜன 09, 2025 10:34

நீங்க அமெரிக்க விடியல் அதிபர்.


samvijayv
ஜன 09, 2025 10:22

முதலில் உங்ககளுக்கு தேவை ஒய்வு.


Kasimani Baskaran
ஜன 09, 2025 07:53

எல்லையில்லா கோமாளித்தனங்கள் ஏற்கனவே செய்திருப்பதால் பைடனால் ஜெயித்திருக்க வாய்ப்பில்லை.


அப்பாவி
ஜன 09, 2025 06:32

இவரை தேர்தலில் நிக்காதீங்கன்னு சொன்னவங்களே இவிங்க கட்சி மக்கள்தான். இவருக்கு மறந்து போச்சு.


Senthoora
ஜன 09, 2025 06:17

தாராள மனசு என்பதா? அல்லது விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்று சொல்வதா?


Rajan
ஜன 09, 2025 00:12

தன்நம்பிக்கை


SANKAR
ஜன 08, 2025 22:40

uthay vaangiya kezham peththuthu


சமீபத்திய செய்தி