உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது; அதிருப்தியை கொட்டி தீர்த்த டிரம்ப்!

எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது; அதிருப்தியை கொட்டி தீர்த்த டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நான் என்ன செய்தாலும், '' எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு இந்த நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. நார்வே நாட்டு நோபல் குழுவினர் இந்த பணியை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறதுhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xcefcg9j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடப்பாண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, நான் என்ன செய்தாலும், '' எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது'' என அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல ஆண்டுகளாக நடந்து வரும், வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்ரிக்காவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கும் ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.எகிப்துக்கும், எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணுவதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மக்களுக்கு நன்றாக தெரியும். எனக்கு அவ்வளவு தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

..
ஜூன் 21, 2025 18:05

டிரம்ப் சர்வதேச கோமாளி


Ram
ஜூன் 21, 2025 16:28

லூசா இருபாநொ


N Srinivasan
ஜூன் 21, 2025 15:57

இப்படி சொந்த காசிலே புகழ்ந்து பேசி பின்னால் சொந்த காசிலே சூனியம் வைத்துக்கொள்ளும் நிலைமை வரும் வெயிட் பண்ணு


Shankar
ஜூன் 21, 2025 14:55

பெங்காலி மொகமது யூனுஸ் பட்டத்தை புடுங்கி இந்த முடிச்சிமாறிக்கு கொடுத்து விடலாம். இவன்மார் ரெண்டுபேருக்கும் ஒரே புத்தி சாயல்.


venugopal s
ஜூன் 21, 2025 14:04

நம்மவருடன் சேர்ந்தால் இப்படித்தான் ஆகும், யாராவது ஏதாவது அவார்ட் கொடுக்க மாட்டார்களா என்று எப்போதும் எதிர்பார்க்கத் தோன்றும்!


venugopal s
ஜூன் 21, 2025 13:45

செய்த சாதனையைக் கூட அவரை சொல்ல விட மாட்டோம் என்கிறீர்களே, இது நியாயமா?


Anand
ஜூன் 21, 2025 13:11

அதற்கு ஏன் இவ்வளவு கவலைப்படணும்? நோபல் பரிசை வழங்கும் நார்வே நாட்டை மிரட்டி உருட்டினால் தானாக கிடைத்துவிடப்போகிறது.


Ramesh Sargam
ஜூன் 21, 2025 12:48

நான் என்ன செய்தாலும், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் என்ன நினைக்கிறேன் என்றால், டிரம்ப் அவர்கள் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவருக்கு அந்த நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.


Ramesh Sargam
ஜூன் 21, 2025 12:34

ஆக ஐயாவுக்கு நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்று ஒரு ஆசை இருந்திருக்கிறது. ஒருவேளை அவருக்கு அது கிடைத்திருந்தால் அந்த பரிசின் மொத்த மதிப்பும் அன்றே தொலைந்துவிடும். இனி வரும் காலங்களில் அந்த பரிசை யாரும் வாங்க மறுப்பார்கள். You want Nobel Prize? No. என்று மக்கள் மறுப்பார்கள்.


Anand
ஜூன் 21, 2025 11:41

கோபம் வருகிற மாதிரி காமெடி செய்யும் கோமாளி என நோபல் பரிசு கொடுக்கலாம்.


Chandrasekaran S
ஜூன் 21, 2025 12:27

சர்வதேச சகுனி பரிசு தான் சரி


sivakumar
ஜூன் 21, 2025 13:17

சரியாக சொன்னிங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை