உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா இதை மட்டும் செய்தால் நாளையே 25% வரி ரத்து: கொக்கரிக்கும் அமெரிக்கா!

இந்தியா இதை மட்டும் செய்தால் நாளையே 25% வரி ரத்து: கொக்கரிக்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்ந்து இருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எதிர்க்கட்சியினரே இந்த அதிக வரி விதிப்பை எதிர்க்கின்றனர். இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த மற்றம் உயர்மட்ட வர்த்தக ஆலோசகராக இருக்கும் பீட்டர் நவரோ கருத்து தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aa5cixm9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வர்த்தகம் மற்றும் உற்பத்தி தொடர்பான ஆலோசனையை அதிபர் டிரம்புக்கு வழங்கும் முக்கிய நபர் இவர் தான். இவர் அளித்த பேட்டி விபரம் பின்வருமாறு: ‛உக்ரைன்-ரஷ்யா போர் அடிப்படையில் மோடியின் போர் தான். காரணம், இன்று அமைதிக்கான பாதை டில்லியின் வழியாக தான் செல்கிறது.ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி போர் இயந்திரத்துக்கு இந்தியா உதவுகிறது. அந்த பணத்தை வைத்து தான் உக்ரைனியர்களை ரஷ்யா கொன்று குவிக்கிறது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளைக்கே இந்தியா மீது விதித்த வரியில் 25 சதவீதத்தை தள்ளுபடி செய்வோம். ஆனால் அவர்களை பாருங்கள். ஜனநாயக நாடுகளுடன் சாய்வதற்கு பதில், சர்வாதிகாரிகளுடன் கரம் கோர்க்கிறார்கள். பல காலமாக சீனாவுடன் போரில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். அக்சாய் சின் மற்றும் உங்களில் பல பிரதேசங்களை சீனா ஆக்கிரமித்தது.சீனா உங்கள் நண்பன் அல்ல. ரஷ்யாவும் அப்படி தான். இந்தியாவை நினைத்தால் குழப்பமாக இருக்கிறது. மோடி ஒரு சிறந்த தலைவர். ஜனநாயக நாடு இந்தியா. அவர்களா இப்படி இருக்கிறார்கள் என்பது தான் குழப்பமாக இருக்கிறது. இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களது வருமானம், வேலைகளை இழக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Zi King
செப் 04, 2025 07:57

Country with max number of divorce, child pregnancy / abortion, racial abuse wont understand true relation. Tax is not for India, its for US people who are buying our products & service. US population is getting more stupider every year, eduction cost is high so educated people dont have kids. Stupid people & illegal immigrants make lot of babies. When stupid people vote trump is the result. Enjoy


VELUSAMY MARAPPAGOUNDER
ஆக 29, 2025 11:47

ரஷ்யாவிடம் அமெரிக்கா தோற்றுவிட்டது அதற்கு இந்திய உதவியை மிரட்டி பெற பார்க்கிறார்கள் இது பெரிய நாடு என்ற பெயரில் செய்யும் ஈனத்தனம்


Narayanan
ஆக 29, 2025 10:32

இந்தியன் பணம் எங்களது பணம் எங்களுக்கு வசதியான இடத்தில் வாங்கினால் உனக்கென்ன வந்தது? எங்களுக்கு லாபமான வகையில் வாங்குகிறோம். நீ யார் அபராதம் விதிக்க? உங்களின் அறிவுரை தேவை இல்லை. நாளொரு பொய் சொல்லும் ட்ரும்பை அந்த நாடு மக்கள் தூக்கி எறியவேண்டும் .


Mahalingam Laxman
ஆக 29, 2025 08:31

It is wrong to say that India purchasing oil from Russia is the reason for the Ukrain Russia war. India made it clear that Russian oil is cheaper and Russia accepts rupee payment. If US really wants to it, US should offer its oil 25% lesser than Russia and accept rupee payment. ARE THEY PREPARED TO PROVE THEIR SINCERITY AND HONESTY.


surya krishna
ஆக 29, 2025 08:11

அமெரிக்கா ஒரு சூனியக்கார நாடு. அதனின் அறிவுரை இந்தியாவுக்கு தேவையில்லை


பேசும் தமிழன்
ஆக 29, 2025 08:04

எந்த ஒரு நாடும்..... அவர்கள் விரும்பும் நாடுகளுடன் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு..... நீங்களும் வேண்டாம் உங்களது வரியும் வேண்டாம்.....ரஷ்யா எங்களது நட்பு நாடு.... அவர்களுடன் வர்த்தகம் செய்ய கூடாது என்று கூற நீங்கள் யார் ???


Appan
ஆக 29, 2025 06:59

62 சீனா போரில் இந்திய படு தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி இந்தியா அதன் ராணுவ திறனை மேம்பட்ட செய்தது. அப்போது இந்த DRDO , BEL , ECIL , MIDHANI . HAL ..போன்ற அரசு பொது நிறுவகங்கள் நிறுவி ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து இந்தி பாகிஸ்தானின் பல போர்களை வென்றது. சிந்துர் போர் உலகுக்கு இந்தியாவின் போர்த்திறமையை நிரூபித்தது. இந்தியாவுக்கு இப்போ வந்துள்ள அமெரிக்காவின் வரி போர் ஒரு நல்ல opportunity . இந்தியா மீண்டும் புது பொலிவுடன் எழும். அமெரிக்காவுக்கு நிரந்தர நண்பன் கிடையாது. இந்த 75 வருடம் இந்திய தனித்தன்மையுடன் இருந்தது. இந்த வரி போர் இந்தியாவை ஒரு strong நாடாக மாற்றும்.


பேசும் தமிழன்
ஆக 29, 2025 00:12

உங்கள் டாலருக்கு சாவு மணி அடிக்கும் நேரம் வந்து விட்டது.... பிரிக்ஸ் அமைப்பு அதை செய்து முடிக்கும்.


Gokul Krishnan
ஆக 28, 2025 23:52

பாகிஸ்தான் ராணுவ தளபதி சயீத் முனிரை வெள்ளை மாளிகை வர வைத்து ராஜ உபசாரம் செய்த போது அவர் மக்களால் தேர்வு செய்யப்படாதவர் என்று அமெரிக்காவுக்கு தெரியவில்லையா


Santhosh Kumar
ஆக 28, 2025 23:40

kamala harris தோற்றவுடன் அப்பாடா இந்தியா தப்பித்தது அப்டினு நெனைச்சு சந்தோஷப்பட்ட இந்தியன் trumph supports எல்லோரூம் எங்கே போய்ட்டாங்க


Suppan
செப் 03, 2025 16:49

அந்த அம்மணி ட்ரம்பை விட மோசம். இந்தியாவின் எதிரி


சமீபத்திய செய்தி