உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத்: ''வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவை முந்தாவிட்டால், எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்,'' என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.பாகிஸ்தானின் தேரா காஜி கான் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவை முந்தாவிட்டால், எனது பெயர் ஷெபாஸ் ஷெரீப் அல்ல. இந்தியாவை முந்தி பாகிஸ்தானை சிறந்த நாடாக மாற்றுவோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1j27gqou&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான் நவாஸ் கானின் ஆதரவாளர். பதவியேற்ற போது அவர் அளித்த ஆசி எனக்கு ஊக்கம் அளித்து வருகிறது. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி பாகிஸ்தானை சிறந்த நாடாக மாற்றி இந்தியாவை தோற்கடிப்போம். இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியானதும், அவரையும், பாகிஸ்தானையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
பிப் 25, 2025 21:03

தனது நாட்டுக்காக ரோசமா பேச வேண்டியது தான். ஆனால் அதற்கான திட்டங்கள், நிதி எங்கிருந்து வரும். பாக்கிஸ்தான் மக்கள் வெளிநாடுகளில் பிச்சை எடுத்து கொண்டு வரும் நிதியை கொண்டு என்ன செய்ய முடியும். கடின உழைப்பு உங்க நாட்டு மக்களுக்கு கிடையாது. பொறாமை, தீய வழிகளில் பணம் சேர்க்கும் புத்தி உடைய நீங்கள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் இப்படி தான் இருப்பீர்கள்.


Krish Sankaran
பிப் 25, 2025 18:03

ராகுல் காந்தி என்றா


எவர்கிங்
பிப் 25, 2025 18:02

ராகுகால வாந்தி என்று இப்பவே மாற்றிக் கொள்