உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து

இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து

பிஜிங்: 'இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்' என இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்ததற்காக டிரம்பை சீன துாதர் சாடி உள்ளார்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு, அபராத வரி விதிப்பு செய்யப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதன்படி இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலுக்கும் வேறு சில காரணங்களை கூறி, 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடி சீனாவுக்கும் வரி விதிப்பதாக டிரம்ப் கூறி வருகிறார்.இது தொடர்பாக, நமது நாட்டுக்காக சீனத் தூதர் சூ பீஹாங் வெளியிட்டுள்ள பதிவில், பிரேசில் அதிபரின் தலைமை ஆலோசகருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தொலைபேசியில் உரையாடினார் என்று தெரிவித்துள்ளார்.சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், 'மற்ற நாடுகளை அடக்குவதற்கு வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். உலக வர்த்தக அமைப்பின் விதிகளை பலவீனப்படுத்துகிறது. இந்த அணுகு முறையை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.இந்த தகவலை பகிர்ந்த இந்தியாவுக்கான சீன தூதர் சூ பீஹாங், 'இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்' என பெயர் குறிப்பிடாமல் டிரம்பை விமர்சித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஆக 07, 2025 20:51

படுக்க பாய் போட்டால் அப்புறம் வேறொன்று கேட்பார் அந்த டிரம்ப். அதான்பா போத்திக்க போர்வை கேட்பார் என்று கூறவந்தேன். அதுக்குள்ள உங்கள் கற்பனையை வேறு பக்கம் திருப்பாதீங்க.


Ramesh Sargam
ஆக 07, 2025 20:43

இந்தியாவின் மீதான அதிக வரிவிதிப்பினால் சீனாவும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. இதுதான் சரியான தருணம் இந்தியா-சீன நலிவடைந்துள்ள உறவு மீண்டு எழ. ஒருபக்கம் சீனா ஆதரவு வார்த்தைகள். மறுபக்கம் ரஷ்யா அதிபர் புடின் வருகை என்கிற செய்தி. டிரம்புக்கு இவை மீண்டும் கோபத்தை அதிகரிக்கும். அடுத்து என்ன செய்வாரோ அந்த டிரம்ப்?


MARUTHU PANDIAR
ஆக 07, 2025 22:15

ஊஹூம். டிராகனை அப்படி எளிதில் நம்ப லாயக்கில்லை. சில நாட்களிலேயே அருணாச்சல் சீனாவுடையது அப்படீன்னு ஆரம்பிப்பான். தற்போது அவனுக்கும் அடி விழுந்ததால் அடக்கி வாசிக்கிறான். எச்சரிக்கை தான் இவனிடத்தில் எப்போதும் வேண்டும். நம்பத்தகாதவன். அமெரிக்கா வெளிப்படையாய் செய்வதை சத்தம் இல்லாமல் செய்பவன் இவன்.


தமிழன்
ஆக 07, 2025 19:31

எல்லா நாட்டிலும் பழமொழி ஒரே மாதிரி தான் இருக்கும்னு நினைக்கிறேன்


V K
ஆக 07, 2025 19:28

சபாஷ் சீனாகாரன் கருத்து சூப்பர் ...நம்ம அதிபர் பெட்ரோல் பம்ப்க்கு தெரியுமா


Shivakumar
ஆக 07, 2025 19:18

இந்திய, சீனா, ரஷ்யா, வடகொரியா சேர்ந்தால் ட்ரம்பின் கொட்டம் தானாக அடங்கிவிடும்.


subramanian
ஆக 07, 2025 19:04

சீனாக்காரனுக்கு பாதிப்பு ஏற்படும்,அதற்கு பேசி உள்ளான்...


சிட்டுக்குருவி
ஆக 07, 2025 18:51

உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்படும் அமெரிக்கா அதிபர் எல்லாவிதமான மனித கொலைக்குற்றங்களுக்கும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவேண்டும் .தீவிரவாதத்த்தையே தங்களுடைய நாட்டின் வெளியுறவுக்கொள்கையாக வைத்துள்ள பாகிஸ்தானின் படை தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிப்பதேன்? விருந்தளிக்கும்போது அமெரிக்காவின் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீவிரவாதிகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கோராதது ஏன்? மறுவிருந்தளிக்கும்போதாவது கேட்பீர்களா?


sankaranarayanan
ஆக 07, 2025 18:39

மற்ற நாடுகளை அடக்குவதற்கு வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும்.உலக வர்த்தக அமைப்பின் விதிகளை பலவீனப்படுத்துகிறது. டிரம்பின் இந்த அடாவடி செயலை பாதிக்கப்பட்ட உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டால் பிறகு ஒவ்வொவொரு நாட்டையும் தனித்தனியாக பிரித்து தனது அடிமையாக்கி ஆள தொடங்கிவிடுவார் ஜாக்கிரதை விழித்தெழுங்கள்...


Anand
ஆக 07, 2025 18:33

//இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்// இதுநாள் வரை இது தமிழ் பழமொழி என்றல்லவா நினைத்திருந்தேன், உலக பழமொழியா அல்லது தமிழில் இருந்து உலகம் முழுவதும் பரவியதா?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 07, 2025 22:31

சீன தூதர் என்ன சொன்னாருன்னு நமக்கு தெரியாதல்லவா?


முக்கிய வீடியோ