உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சென்னை ஐ.ஐ.டி., மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை

சென்னை ஐ.ஐ.டி., மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஐ.ஐ.டி.,யில் நடந்த பிளேஸ்மென்ட்டில் ஆண்டுக்கு ரூ.4.30 கோடி ஊதியத்தில் மாணவர் ஒருவருக்கு வேலை கிடைத்துள்ளது. இது சென்னை ஐ.ஐ.டி.,வரலாற்றில் அதிகபட்ச ஊதியமாகும். டில்லி, மும்பை, கோரக்பூர், கவுகாத்தி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பிளேஸ்மென்ட் (PLACEMENT) தொடங்கியுள்ளது. உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், கேபிடல் ஒன், குவாண்ட் பாக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த பிளேஸ்மென்டில், மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி (மாதம் ரூ.35.8 லட்சம்) சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில், படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர் ஒருவருக்கு, வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இது தான். இவர், அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தின் அங்கமான ஜேன் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் ஹாங்காங் பிரிவில் பணி அமர்த்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாணவரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சாப்ட்வேர், வங்கி, பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சார்பிலும் ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9 மாணவர்கள் வெளிநாடுகளின் சலுகைகளை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

வைகுண்டேஸ்வரன்
டிச 05, 2024 20:06

கல்வி சம்பந்தப்பட்ட இந்த மகிழ்ச்சி யான செய்தியில் கூட இட ஒதுக்கீடு என்று அரசியலையும், திராவிட என்ற இனவாதத்தையும் நுழைக்கிற அளவுக்கு மூளை பிசகிப்போன வாசகர்களுக்காக பரிதாபப்படுகிறேன். அந்த மாணவன் மீது வயத்தெரிச்சல் தெரிகிறது.


ஆரூர் ரங்
டிச 05, 2024 22:10

நீங்க LKG முதல் இடஒதுக்கீட்டைகூ கேட்ட போது மற்றவர்களுக்கு இப்படித்தான் இருந்ததது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 05, 2024 19:35

அந்த பாராட்டுக்கு உரிய மாணவரின் திறமைக்கு ஏற்ற வேலை நம்மிடம் இல்லை என்பதே உண்மை. மேலும் அவ்வளவு திறமையான மாணவராக அவரை உருவாக்கிய ஐ.ஐ.டி. ஆசிரியர்களுக்கும், அவரின் பெற்றோருக்கும் மற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணிவான வணக்கமும், வாழ்த்துக்களும். அம்மாணவரின் பெயர் விபரங்களை வெளியிடாமல் இருப்பதே நல்லது. இன்னும் அவர் இறுதி ஆண்டு கல்வியை முடிக்கவில்லை. மேலும் அதனால் அவருக்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதையும் தவிர்க்கலாம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 05, 2024 18:56

ஜஜடி கேம்பஸ் இன்டர்வியூவில் இட ஒதுக்கீடு தேவை என்று திராவிட கட்சிகள் போர் கொடி தூக்க வேண்டும் அவர்களது உப கட்சி கம்யூனிஸ்ட்கள் முதலில் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.


Thamilarasu K
டிச 06, 2024 10:37

இட ஒதுக்கீடா? இங்கே வந்து வெளிநாட்டு நிறுவனம் பணிக்கு தேர்வு செய்யும்போது, அவன் எதிர்பார்க்கிற தகுதி இருந்தால்தான் வேலைக்கு எடுப்பான்..


Oru Indiyan
டிச 05, 2024 18:17

ஒரு திராவிடனுக்கு வேலை கிடையாதா? இந்த ஒன்றிய அரசின் கலவி நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து தூக்கு


kalyanasundaram
டிச 05, 2024 16:47

WHY PAPPU HAS NOT OPENED HIS DIRTY MOUTH AND BLAMED/ACCUSED THE PAIME MINISTER FOR THIS OFFER TO A STUDENT


ஆரூர் ரங்
டிச 05, 2024 16:02

இடஒதுக்கீடு கிடையாதா? இது சமூகநீதி காத்த மண்.


ngm
டிச 05, 2024 15:18

unfortunately no Indian companies offer them like this and to retain our students...all our tax money being spent gor their benefits and they will go abroad and settle ...never ending


Madras Madra
டிச 05, 2024 15:07

அருமை வாழ்த்துக்கள்


Sree
டிச 05, 2024 14:45

வாழ்த்துகள் பிறந்த நாட்டிற்கும் கல்வி கற்ற நிறுவனத்தையும் பெருமை படுத்திவிட்டீர்கள்


சமீபத்திய செய்தி