உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு

சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு

புதுடில்லி அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஹரியானாவைச் சேர்ந்த நான்கு ஏஜன்டுகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில், 104 பேரை முதற்கட்டமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இந்தியாவுக்கு நாடு கடத்தியது.அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், பஞ்சாபின் அமிர்தசரசுக்கு கடந்த 5ம் தேதி வந்து சேர்ந்தனர். இந்த, 104 பேரில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக இடம்பெற்று இருந்தனர்.அவர்கள் அமெரிக்க விசா பெறுவதற்காக உள்ளூர் ஏஜன்டுகளை நம்பி, 50 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து, ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.முறையான விசா இன்றி வெவ்வேறு நாடுகள் வழியாக அழைத்து செல்லப்பட்டு, அமெரிக்காவில் அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்த கண்ணீர் கதைகளை பகிர்ந்து கொண்டனர்.இது போன்ற ஏஜன்ட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பார்லி மென்டில் நேற்று முன்தினம் உறுதி அளித்தார்.இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தவர்களில் மூவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியானாவின் கர்னலை சேர்ந்த நான்கு ஏஜன்டுகள் மீது, குடியேற்ற சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளித்தவர்கள் மற்றும் குற்றவாளிகளின் அடையாளத்தை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ethiraj
பிப் 08, 2025 20:49

Haryana agents to be jailed immediately


Karthik
பிப் 08, 2025 14:40

விடை எளிது.. இந்த வெளிநாட்டு ஏஜெண்டுகள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவாருங்கள்.


அப்பாவி
பிப் 08, 2025 08:53

நமக்கு இருக்கிற மூளைக்கு ட்ரம்ப் மேலேயே வழக்கு போடலாமே.


Swamimalai Siva
பிப் 08, 2025 08:43

அவா அவா என்று கதறும் அறிவிலிகளே கேளுங்கள். அவா யார் உதவியும் இல்லாமல் படித்து முன்னேறி பெரிய பெரிய பதவிகளை நிர்வகிக்கின்றனர். ஆனால் உங்களை படியுங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள் என சொல்வதை விடுத்து, அடங்கமறு, ஒவ்வொருவர் பெயரிலும் 10 வழக்குகள் இருக்கவேண்டும், இந்தாபிடி 200 ரூவா, ஒரு குவாட்டர், ஒரு பிரியாணி பார்சல் . போராடடத்துக்கு வா, நான், என் குடும்பம் வாழ வேண்டும், நீ எப்படி போனால் எனக்கென்னன்னு சொல்லும் நடிகன், அரசியல் வியாதிகளின் பின் சென்றால் இப்படித்தான் புலம்ப வேண்டும். இன்னும் பல இருக்கு. புரிந்தால் சரி


Kalyanaraman
பிப் 08, 2025 08:16

உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய -மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள். இது போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்களிடமும் விசாரணை மேற்கொண்டு தடை செய்ய வேண்டும். அடிப்படையில் நமது நாட்டில் எந்த குற்றம் செய்தாலும் தண்டனை மிகவும் குறைவு. மேலும், வழக்குகள் பல வருடங்கள் இழுத்துக் கொண்டே போகிறது. இதுவே குற்றவாளிகளும் குற்றங்களும் பெருகுவதற்கும் மிக முக்கிய காரணம். இதை சரி செய்யாவிட்டால் வருங்காலத்தில் மாவோயிஸ்டுகள் பெருகுவதை யாராலும் தடுக்க முடியாது. நம் நாட்டிற்கு பெரும் கேடாக அமையும்.


Kasimani Baskaran
பிப் 08, 2025 07:35

கரெக்ட்... நீதித்துறை அப்படியே உடனேயே தண்டனை கொடுத்து விடும்...


m.arunachalam
பிப் 08, 2025 05:41

வழக்கு சரிதான் . தண்டனை உண்டா ?


J.V. Iyer
பிப் 08, 2025 04:30

போலி ஏஜெண்ட்களை ஒழித்தால்தான் தீர்வு. இவர்கள் கொடியவர்கள்.


Padmasridharan
பிப் 08, 2025 03:22

இன்னும் எத்தனையோ எ மறைந்து கொண்டு ஏமாற்றுகிறார்கள். காரணம் அயல் நாட்டு வேலை மோகம். இந்தியாவில் சம்பாதித்தால் இந்தியாவிலேயே நல்லா, சுதந்திரமா வாழ முடியாது


கிஜன்
பிப் 08, 2025 03:20

இனி அமெரிக்கால லீகலா அவா மட்டும் தான் இருப்பா ..... புவ்வாக்கு போனவாள்ளாம் சூதானமா இருக்க வேண்டியதுதான் .... அதுதான் கமெண்ட்ஸ் ல பொங்குறா போல ....


N Sasikumar Yadhav
பிப் 08, 2025 06:00

அவா திறமையுடன் சென்று பணியாற்றுகிறா . உங்கள மாதிரியான திராவிட கொத்தடிமைகள் அவாக்களின் திறமையை உபயோகிக்க தெரியாமல் தொல்லைகள் தந்து துரத்துகிறீர் திருட்டு திராவிட களவானிங்க இல்லையென்றால் உலகம் நன்றாக இருக்கும்


ஓவிய விஜய்,
பிப் 08, 2025 07:11

அவா ஒண்ணும் ஈர வெங்காய கோட்டா, இந்த கோட்டா அப்படி எல்லாம் இல்லாமல் லஞ்சம் இல்லமால் தனி திறமையை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உன்னை போல கொத்தடிமை இல்லை...இன்னும் 1000 வருஷம் ஆனாலும் நீங்கள் கதற வேண்டியது தான்


Swamimalai Siva
பிப் 08, 2025 09:03

இனி அமெரிக்கால லீகலா அவா மட்டும் தான் இருப்பா ஏன்னா அவா லீகலா போறா. ஆனால் இல்லிகலா, திருட்டுத்தனமா போனவாளை என்ன பண்ணனுங்கரேள்னு டிரம்பு கிடட சொல்லுங்கோ.


venugopal s
பிப் 08, 2025 11:00

இந்த விஷயத்தில் அவா இவா என்ற வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள் எல்லோரும் முறையாக விசா பெற்று சென்றவர்கள், வழக்கம் போல் வட இந்தியர்கள் மற்றும் குஜராத்திகள் தான் இதுபோல் திருட்டுத்தனமாக சென்று மாட்டிக் கொண்டார்கள்!