உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி: கொலம்பியா அதிபர் பெட்ரோவை விமர்சித்த டிரம்ப்!

சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி: கொலம்பியா அதிபர் பெட்ரோவை விமர்சித்த டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்து உள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, வயல்களில் போதைப்பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார். அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி. போதைப்பொருள் கொலம்பியாவில் மிகப்பெரிய வணிகமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தபோதிலும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.அந்நாட்டிற்கான உதவியை அமெரிக்கா நிறுத்துகிறது. இனி கொலம்பியாவிற்கு எந்த நிதியும், மானியமும் வழங்கப்படாது. இந்த போதைப்பொருட்கள் உற்பத்தியின் நோக்கம், அமெரிக்காவிற்குள் விற்பனை செய்வதாகும். இதனால் உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் ஏற்படுகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jey a
அக் 19, 2025 20:04

திமுகா குடும்பத்தை ராஜா வாக உருவாக்கிய தமிழார் விட இது மோசம் இல்ல


V K
அக் 19, 2025 19:54

இந்த தாத்தா அமைதிக்கான நோபல் பரிசு வாங்கற வரைக்கும் அமைதியாக இருக்க மாட்டார்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 19, 2025 19:54

அங்கே இவரை ட்ரம்ப் மாமா என்று அழைக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை