உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குவைத்தில் சட்டவிரோத மது விற்பனை; இந்தியர் உட்பட 67 பேர் கைது

குவைத்தில் சட்டவிரோத மது விற்பனை; இந்தியர் உட்பட 67 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத்: குவைத்தில் சட்டவிரோத மது விற்பனை செய்த இந்திய, வங்கதேச மற்றும் நேபாள நாட்டினர் உட்பட 67 பேரை குவைத் போலீசார் கைது செய்தனர்.மேற்காசிய நாடான குவைத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள், கட்டட தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மது விற்பனைக்கு தடை உள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடித்தது மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மது குடித்த 63 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் இந்தியர்கள் 10 பேர் உட்பட 13 பேர் இறந்துவிட்டனர். இந்தியாவை சேர்ந்த 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார். கள்ளச்சாராயம் கிடைத்தது எப்படி என்பது குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது, சட்டவிரோத மது விற்பனை செய்த இந்திய, வங்கதேச மற்றும் நேபாள நாட்டினர் உட்பட 67 பேரை குவைத் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முதலில் நேபாள நாட்டை சேர்ந்த பூபன் லால் தமாங் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து சட்டவிரோத மதுபான தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மெத்தனால் என்ற நச்சுப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மது விற்பனை செய்த 67 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த ஆறு தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். தற்போது தொழிற்சாலைகள் சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அப்பாவி
ஆக 18, 2025 08:59

டாஸ்மாக் கிளைகள் திறக்க அனுமதி கொடுங்கள். பாட்டிலுக்கு 10 தினார் அதிகம் வெச்சு வித்துக் குடுப்பாங்க. ஆயில் விக்குற வருமானமெல்லாம் ஜுஜுபி..


Azar Mufeen
ஆக 18, 2025 08:02

குஜராத்திலிருந்து பயிற்சி எடுத்துட்டு போயிருப்பானுங்க


அப்பாவி
ஆக 17, 2025 22:41

இவிங்கதான் அங்கே கொடி ஆட்டி வரவேற்ற இந்திய வம்சாவளிகள்...


Ramesh Sargam
ஆக 17, 2025 21:59

இந்தியர் உட்பட 67 பேர் கைது - அதில் தமிழகத்தை சேர்ந்த, குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தமிழகத்தை சேர்ந்த திமுகவினர் எவ்வளவு பேர் கைது என்று சொல்லமுடியுமா?


R K Raman
ஆக 17, 2025 19:32

பத்து லட்சம் உண்டா?


raja
ஆக 17, 2025 18:48

அதிலும் நம் திருட்டு திராவிடர்களின் பங்கு இருக்கிறது என்று நம்ப தகுந்த வட்டாரம் சொல்கிறது...


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 17, 2025 18:19

பாதிப்புக்கு உள்ளானவர்கள் மொத்தம் 76 பேர். அதில் இந்தியர்கள் 50 பேர். 40 பேர் மருத்துவமனையில், 10 பேர் பிண அறையில். இந்தியர்களின் பெருமை கடல்கடந்து சீரும் சிறப்புமாக உள்ளது. போனமா, வேலையை பாத்தமா, வந்தமானு இருப்பதில்லை. உடனே இவங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு 50 பேர் வருவாங்க.


c.mohanraj raj
ஆக 17, 2025 17:51

அங்கேயும் திராவிட மாடல்கள் நுழைந்து விட்டார்கள் போல... ஆனால் அது தமிழ்நாடு அல்ல...


V Venkatachalam
ஆக 17, 2025 16:33

குவைத் புலீஸுக்கு நம்ம கரூர் செ பா வை அணுகினால் தலையில் இருந்து கால் வரை அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று யாராவது சொல்லோணும். அவிங்க இப்பதான் 6 பாக்டரியை கண்டு புடிச்சி சீல் வச்சிருக்காங்க. பாவம்.


Padmasridharan
ஆக 17, 2025 15:43

இந்த நாட்டில மது விற்று போதைக்கு அடிமையாக்கி மத்த நாட்டுக்கு மக்களை வேலைக்கு அனுப்பும்போது இம்மாதிரி நடக்கின்றது சாமி. இந்நாட்டு அரசாங்கம்தான் இதற்கெல்லாம் பொறுப்பேற்கவேண்டும், ஹராம் பொருட்களை இஸ்லாமிய நாட்டில் இவற்றை தயாரித்து குடிக்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை