உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க் - கலிபோர்னியா வரை பல நகரங்களுக்கு பரவிய போராட்டம்

நியூயார்க் - கலிபோர்னியா வரை பல நகரங்களுக்கு பரவிய போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆஸ்டின்: அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்து வெளியேற்றும் குடியேற்ற அமலாக்கத் துறையை கண்டித்தும், லாஸ் ஏஞ்சலசில் அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டதற்கு எதிராகவும் நடந்து வரும் போராட்டம், நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பரவியது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அதிகளவில் புலம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர். அவர்களில் லட்சக்கணக்கானோரிடம் முறையான ஆவணங்கள் இல்லை. கடந்த 6ம் தேதி அங்கு சோதனை நடந்தது. அதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதைக் கண்டித்து துவங்கிய போராட்டம் கலவரமாக மாறியது. அதை அடக்க 4,000 அதிரடிப்படை போலீசார், 700 ராணுவத்தினரை அனுப்ப அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.சியாட்டில், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, டென்வர், பிலடெல்பியா ஆகிய நகரங்களில் குடியேற்ற அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு முன் நுாற்றுக்கணக்கானோர் திரண்டனர்.பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வார இறுதி நாட்களில் மேலும் சில நகரங்களுக்கு பரவக்கூடும் என போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Keshavan.J
ஜூன் 13, 2025 14:37

அனுபவி ராஜா அனுபவி. என்ன பேச்சு பேசினாய் . இவர் தான் இந்தியா பாக்கிஸ்தான் போரை நிறுத்தினராம். உள் நாட்டு போரை நிறுத்த வக்கில்லை , பீலா மன்னன். பாக்கிஸ்தான் failed மார்ஷல் என்கின்ற சாத்தானை கூப்பிட்ட இல்லை அனுபவி.


Sridhar
ஜூன் 13, 2025 14:15

அங்கே உள்ள ஜனநாயக கட்சி ஆட்களுக்கும் ஹமாஸ் ஆட்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லங்கறது இந்த அராஜகத்திலிருந்து வெட்டவெளிச்சமாயிருக்கிறது. இந்த நோய் வெளியே வந்திருப்பது நல்லதுதான். ஆட்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு தீவிரவாதியையும் தலை எடுக்கமுடியாத அளவுக்கு செஞ்சிவிடவேண்டும். நடவடிக்கைகளின் தீவிரத்தால், இனிமேலும் ஒரு ரௌடி இவ்வாறான அராஜக செயல்களை செய்ய பயப்படவேண்டும். அமெரிக்கா மீண்டும் உயரத்தை தொடவேண்டுமென்றால், அரசு இரும்புக்கரம் கொண்டு இந்த அநாகரீக கும்பலை களையவேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 13, 2025 13:46

எப்பொழுதும் இது போன்ற போராட்டங்கள் அமெரிக்கா உளவுத்துறை வேறு நாடுகளில் நடத்தும். இப்போது அமெரிக்காவிலேயே வந்துள்ளது. இது தீவிரவாத அமைப்புகளின் வேலையாக கூட இருக்கலாம். இங்கிலாந்து போல் இனி நியுயார்க் முஸ்லிம்கள் கைகளுக்கு சென்றாலும் சென்று விடும். பாகிஸ்தான் இராணுவ தளபதி அழைக்கப்பட்டதற்கு காரணம் வியாபாரம் தான். ஜ எம் எப் விடுவிக்க போகும் பில்லியன் டாலர் பணம் வியாபாரம் மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்ப சென்று டிரம்ப் மகன்களின் கம்பெனி கஜானாக்கள் நிரம்பலாம். டிரம்ப் இன்டர்நேஷனல் திராவிட மாடல் பின்பற்றுகிறார்.


V.Mohan
ஜூன் 13, 2025 12:16

இந்தியாவில் உள்ளது போலவே யுஎஸ் யிலும் கள்ளத்தனமாக வேரு நாட்டு மனிதர்களை ஒப்பந்தம் பொய்யாக போட்டு கொண்டு வந்து வேலை வாங்கி கொள்ளை பணம் சம்பாதித்த ஆட்கள் , இந்த கலகத்தை முன்னாடி நின்னு நடத்துவது தெளிவாக தெரியுது இவனுங்களை தாட்சண்யம் பாக்காம அவனுங்க நாட்டுக்கே அனுப்பிவிடனும்.


Ramaraj P
ஜூன் 13, 2025 10:38

இது மாதிரி பெரிய வன்முறை பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாட்டில் ஏற்பட்டது வரலாறு. அதில் பாதிக்கப்பட்டது சிறுபான்மை பெண்கள் மற்றும் சொத்துக்கள் இது மாதிரி போராட்டம் இந்தியாவில் வரக்கூடாது. #jaisriram


Mohan
ஜூன் 13, 2025 09:36

அமெரிக்காவுக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்தா தக்காளி சட்னி ...இதுவே நம்ம நாட்டுல CAA , NRC போராட்டமா இருக்கட்டும் இந்தியா மனித உரிமையை மீறுது , குய்யோ முய்யோன்னு கதையை கட்டி விட்ருவானுக ..இப்போ தெரியுதா ..நல்ல வேணும் ... பத்தா குறைக்கு இப்போ அமெரிக்காவின் ராணுவ தினத்துக்கு அசிம் முணிர்க்கு சிறப்பு அழைப்பு இது நம்மள எரிச்சசல் ஊட்டுறானுகலாமா ...அமெரிக்கா திருந்த வேணும் ...மண்ணுலக எதிரிகள் மொத்தம் மூணு 1 அமெரிக்கா 2 சீனா 3 மூர்க்கன்ஸ்


Ramesh Sargam
ஜூன் 13, 2025 13:05

மிகவும் சரியான கருத்து.


Madras Madra
ஜூன் 13, 2025 14:31

தவறு 3 இல்ல 1


sankaranarayanan
ஜூன் 13, 2025 09:35

இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் மற்ற நாடுகளில் நடந்தால் உடனே அமெரிக்க அந்த நாடுகள் மனித உரிமையை மீறுகின்றன என்று பொய்யான செய்தியை பரப்புவார்கள் ஆனால் இவர்கள் என்ன எய்தாலும் அது சரி மனித உரிமையாகவே கருதப்படாது என்னடா இந்த விபரிதம்


காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியன்
ஜூன் 13, 2025 08:05

அமெரிக்க அரசு இந்த கலவரத்தில் மக்களின் மனித உரிமைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Ramaraj P
ஜூன் 13, 2025 07:33

வேறு நாடுகளில் இதுமாதிரி நடந்தால் அமெரிக்கா வெளியுறவுத் துறையின் அறிக்கை: அமெரிக்க பாதுகாப்பான நாடாக நம் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


nagendhiran
ஜூன் 13, 2025 06:20

இது மாதிரி இந்தியாவில் நடக்காமல் இருக்கதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை