உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி., அணி வெற்றி: கோட்டை விட்ட இந்தியா

ஆஸி., அணி வெற்றி: கோட்டை விட்ட இந்தியா

சிட்னி: சிட்னியில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸி., அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸி., அணி தகுதி பெற்றது.ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இந்தியா, தொடரில் 1--2 என பின்தங்கியுள்ளது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 9/1 ரன் எடுத்து, 176 ரன் பின்தங்கி இருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2வது நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்திருந்தது. இன்று (ஜன.,05) 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இன்றும் ஆஸ்திரேலிய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி 39.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. 3 விக்கெட்டுகளை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தி அசத்தினர். எனினும் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி நடையை இந்திய வீரர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.ஆஸ்திரேலியா, 27வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு, 162 ரன்கள் எடுத்தது. 5வது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸி., அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸி., அணி தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Laddoo
ஜன 05, 2025 17:56

விராத் கோஹ்லி ஓர் பழைய பெருங்காய டப்பா. கோடானுகோடி சம்பாதித்து விட்டு இங்கிலாந்தில் செட்டில் ஆயிட்டார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர் விட்டுச் சென்றது வெறும் தாடி கலாச்சாரம் தான்.


Senthoora
ஜன 05, 2025 17:11

இவர்கள் கிரிக்கெட்டை விட்டால் பொண்டாட்டியும் போய்விடுவாள். மானத்தமிழன் அப்படி அல்ல. இன்றைய தோல்லிவி நாளை வெற்றியின் படிகள் என்பதை உணர்ந்தவன்.


venugopal s
ஜன 05, 2025 16:38

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி நிலைமை விரைவில் இந்திய அரசியலில் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு வரும் என்று நினைக்கிறேன்! மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள்!


vikram
ஜன 05, 2025 13:24

முதல் டெஸ்ட்ல ஜெயிச்ச உடனே ரொம்ப ஆட்டம் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி மூன்றாவது டிஸ்டில் வருண பகவான் இந்தியாவை காப்பாற்றியது நாலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி ஐந்தாவது ஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி


subramanian
ஜன 05, 2025 13:08

அடுத்த முறை நாம் வெற்றி பெறுவது உறுதி


sundarsvpr
ஜன 05, 2025 11:22

திறமையான வெற்றி பெற்றது. இந்த திறமையான அடிக்கடி அழுகுனியாட்டம் ஆடும். கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றுவார்கள். இவர்கள் தடுப்பு ஆட்டமல்ல அடித்துஆடுவதில் திறமையுள்ளவராக இருப்பர். உதாரணத்திற்கு. விஜய் ஹசாரே பாபு நட்கர்னி ஹேனு அதிகாரி ராமசந்த கோபிநாத் கபில்தேவ் போன்றோர். இதில் சிலர் தோற்கும் ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி மாற்றுவார்கள். ஆனால் ஒரு உண்மையை மறக்கக்கூடாது. ஆட்டக்காரர்களிடையே இணக்கம் இல்லை என்பது.


Narasimhan
ஜன 05, 2025 11:21

தமிழன் மானம் உள்ளவன். அதனால்தான் அணி தோற்றதை தன்னுடைய தோல்வியாக கருதி அஸ்வின் ஓய்வு அறிவித்தார். இதே வடநாட்டு கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் முழுக்க முழுக்க தோல்விக்கு காரணமாக இருந்தும் ஓய்வு அறிவிக்க மறுக்கின்றனர். ஏனென்றால் வருடத்துக்கு ஏழு கோடி வருவாய் இழந்துவிடுவார்கள் என்பதால். கிரிக்கெட்டிலும் அரசியல் இருப்பதால் தான் தகுதியுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை


SANKAR
ஜன 05, 2025 09:51

I am happy because Ashwin got his revenge


rama adhavan
ஜன 05, 2025 09:38

உயிர் இல்லாத ஆடு களத்தில் இந்திய அணி புலி. உயிர் ஓட்டம் உள்ள ஆடு களத்தில் எலி. ஐ பி எல் போட்டிகளிலோ படு சூரர்கள். ஏனெனில் அத்தனையும் சல்லி. வெளிநாட்டில் நல்ல அணிகளுடன் மோதினால் சுள்ளி போல் உடையும் அணி இது.


raj
ஜன 05, 2025 09:24

இது ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே ஒரு பவுலரியோ ஒரு பேட்ஸ்மேன் ஓவரா புகழக்கூடாது


rama adhavan
ஜன 05, 2025 18:33

எல்லாம் வியாபார தந்திரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை