உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயர்லாந்து அதிபராக சுயேச்சை வேட்பாளர் தேர்வு

அயர்லாந்து அதிபராக சுயேச்சை வேட்பாளர் தேர்வு

லண்டன்: அயர்லாந்தில் நடந்த அதிபர் தேர்தலில், இடதுசாரி சார்புடைய சுயேச்சை வேட்பாளர் கேத்தரின் கோனொலி, 68, வெற்றி பெற்றார். ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், இடதுசாரி சார்புடைய கேத்தரின் கோனொலி, 68, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு அந்நாட்டின் இடதுசாரி கட்சிகளான சின் பெயின், லேபர் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன. தற்போதைய அதிபரான மைக்கேல் டி ஹிக்கின்சை பின்னுக்கு தள்ளி, 63 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று, கோனொலி மிகப் பெ ரிய வெற்றியை பதிவு செய்து உ ள்ளார். வரும் நவ., 11ல் கோனொலி அதிபராக பதவியேற்கிறார். இவர் அயர்லாந்தின் 10வது அதிபர் ஆவார். மேலும், அயர்லாந்து வரலாற்றில் மூன்றாவது பெண் அதிபர் என்ற பெருமையையும் பெறுகிறார். லீட்ஸ் பல்கலையில் மருத்துவ உளவியலில் முதுகலை பட்டம் பெற்ற கேத்தரின் கோனொலி, அதன்பின், கால்வே பல்கலையில் சட்டம் பயின்று, 1991 முதல் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 1997ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்கு பின், லேபர் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு, தன் அரசியல் பயணத்தை துவங்கினார். கடந்த 1999ல் லேபர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, கால்வே நகர கவுன்சிலராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். 2004 - 2005ம் காலகட்டத்தில் கால்வே நகர மேயராக பணியாற்றினார். கடந்த 2006ம் ஆண்டு வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லேபர் கட்சியில் இருந்து பிரிந்து சுயேட்சை அரசியல்வாதியாக தன் பயணத்தை தொடர்ந்தார். கடந்த 2016 முதல் கால்வே மேற்கு தொகுதி பார்லிமென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 முதல் 2024 வரை அயர்லாந்து பார்லிமென்டில் முதல் பெண் துணை சபா நாயகராக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி