உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு

பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதில் தங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்தியாவும் எகிப்தும் ஒப்புக் கொண்டுள்ளன. எகிப்து நாட்டில் கெய்ரோவில், பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பணிக்குழுவின் 4வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ''பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதில் தங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த வேண்டும்'' என இந்தியாவும், எகிப்தும் ஒப்புக் கொண்டன.பஹல்காமில் சமீபத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இரு நாடுகளும் கடுமையாகக் கண்டிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அனைத்து வகையான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுக்கு எகிப்து தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. எகிப்தின் வெளியுறவு அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் இயக்குநர் தூதர் வாலித் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கு அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 01, 2025 11:58

மன்னிக்கவும்.. எகிப்தை நம்புனா துருக்கியையும் நம்புறதுல தப்பில்ல..


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 01, 2025 11:58

துருக்கியை நம்புனா எகிப்தையும் நம்பலாம் .....


V RAMASWAMY
மே 01, 2025 11:51

நம்பமுடியாத இலை நாடுகள், பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல் உள்ளன. நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். உதாரணம், சிரியா , ஈரான் போன்றவை நமக்கும் ஆதரவு, எதிரிகளுக்கும் ஆதரவு.


Ramesh Sargam
மே 01, 2025 11:42

ஆக பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடங்கினால், இந்தியாவுக்கு எகிப்து ஆதரவு நிச்சயம். உலகில் உள்ள பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகையால் பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பது நல்லது. இல்லது அழிவுதான்.