உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - பிரான்ஸ் இடையே கருடா 25 வான் பாதுகாப்பு பயிற்சி துவக்கம்

இந்தியா - பிரான்ஸ் இடையே கருடா 25 வான் பாதுகாப்பு பயிற்சி துவக்கம்

பாரிஸ்: இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் 'கருடா' என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கருடா என்ற வான் போர் பயிற்சி கடந்த 2003ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த இருதரப்பு விமானப் பயிற்சியின் போது, போர் விமானங்கள், மற்றும் பயிற்சி முறைகளை சோதித்து பார்க்கின்றனர். இந்தப் பயிற்சிக்காக இந்தியாவின் முக்கிய போர் விமானமான சுகோய் 30எம்கேஐ விமானங்களுடன் இந்திய விமானப் படையினர் பிரான்ஸ் சென்றுள்ளனர். அங்குள்ள மான்ட் டி மார்ஸ் விமான தளத்தில் நேற்று தொடங்கிய இந்த இருதரப்பு பயிற்சி நவ.,27ம் தேதி வரை நடக்கிறது. இலக்குகளை தாக்குவது, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகளை இருநாடுகளும் மேற்கொள்ள இருக்கின்றன. இது குறித்து இந்திய விமானப் படை வெளியிட்ட பதிவில்; கருடா 25 போர் பயிற்சி துவங்கியது. இரு தரப்பு விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையின் எஸ்யு-30 எம்கேஐ மற்றும் பிரான்ஸ் விமானப் படையின் ரபேல் விமானங்கள் ஒருங்கிணைந்த பணிகளைத் தொடங்கின. இந்தப் பயிற்சியானது, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையேயான திறன் மற்றும் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை