உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அனைத்து துறைகளிலும் பாக்.,கை முந்திய இந்தியா: முப்படை தலைமை தளபதி

அனைத்து துறைகளிலும் பாக்.,கை முந்திய இந்தியா: முப்படை தலைமை தளபதி

சிங்கப்பூர்: '' பன்முகத்தன்மை இருந்த போதிலும் பொருளாதார செயல்பாடு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை காட்டிலும் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறியுள்ளார்.சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: இந்தியா பாகிஸ்தான் உறவை பொறுத்தவரை நாங்கள் எந்த மூலோபாய திட்டங்கள் இல்லாமல் செயல்படவில்லை. நாம் சுதந்திரம் பெற்ற போது, ஜிடிபி, பொருளாதாரம் ஆகியவற்றில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y82rjuht&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், இன்று பன்முகத்தன்மை இருந்த போதிலும் பொருளாதார செயல்பாடு, மனித வள மேம்பாடு, சமூக நல்லிணக்கம் என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ளது.கடந்த 2014 ல் பிரதமர் ஆக பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கைதட்ட இரண்டு கைகள் தேவை. ஆனால், பதிலுக்கு நமக்கு கிடைப்பது விரோதம் மட்டுமே என்றால், இப்போதைக்கு உறவை முறித்துக் கொள்வது ஒரு நல்ல உத்தியாக இருக்கும்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பை பயன்படுத்தினோம். இதோடு, வெளிநாட்டினரின் உதவி இல்லாமல், நமது வான் பாதுகாப்புக்கான கட்டமைப்பை உருவாக்கினோம். மே 7, 8 மற்றும் 10 ஆகிய நாட்களில் பாகிஸ்தானின் உள்பகுதிக்குள் சென்று விமானப்படை தளங்களை தாக்கினோம். அங்கு துல்லியமாக தாக்குதல் நடத்தி அந்நாட்டின் வான் பாதுகாப்பு சக்தியை அழித்தோம். 10 ம் தேதி இந்திய விமானப்படை அனைத்து வகை போர் விமானங்களையும் பயன்படுத்தியது. இந்தியா நடத்திய தாக்குதலில் பெரும்பாலானவை துல்லியமாக நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ganapathi Amir
ஜூன் 02, 2025 02:23

பாகிஸ்தான் ஒரு நாடா ...? அதை மிஞ்சிவிட்டோம் என்று பெருமை கொள்வதற்கு...?


Ramesh Sargam
மே 31, 2025 19:34

ஆனால் ஒரே ஒரு துறையில் நாம் பாகிஸ்தானை முன்னேற கூடாது. அது, பயங்கரவாதிகளை உருவாக்குவது.


மீனவ நண்பன்
மே 31, 2025 20:45

பாகிஸ்தானில் 1947 சுதந்திரம் கொடுத்த நேரத்தில் 6.5 கோடி ஜனத்தொகை இன்று 25 கோடி .. ஒவ்வொரு பெண்மணியும் 4 குழந்தைகள் வரை பெற்றுக்கொளகிறார்கள் பள்ளிக்கூடங்கள் மிக குறைவு பயிர் விளைச்சல் குறைந்து வருகிறது காண்டம்களின் தேவை மற்றும் உபயோகம் பற்றிய செய்தி நேற்று The Dawn பத்திரிக்கையில் வந்திருக்கிறது


Ramesh Sargam
மே 31, 2025 21:12

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் கூடாரங்களை ஒழிக்க இந்தியா அங்கே முன்னேறவேண்டும்.


Suresh Velan
மே 31, 2025 18:50

இவர் உண்மையான தளபதி . நம்மூரில் dmk வில் உள்ள ஒருவரை தளபதி என்கிறார்கள் அது போல , த.வெ.க வில் உள்ள ஒருவரைதளபதி என்கிறார்கள் ,


ramesh
மே 31, 2025 20:18

உண்மை தான் . இவர் தனக்கு சொந்தமான ராணுவ சீருடை அணிந்து பேட்டி கொடுக்கிறார் . மற்றும் ஒருவர் ராணுவ சீருடை அணிந்து போட்டோ ஷூட் நடத்துகிறார்


சிவம்
மே 31, 2025 18:20

நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் நிலைக்கு பாக்கி உள்ளதா என்று முதலில் பாருங்கள். அவர்களுடன் ஒப்பிடக்கூடிய ஒரே துறை தீவிரவாத துறை. நாம் இனி அமெரிக்கா ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் மட்டுமே போட்டி போட வேண்டும், பொருளாதாரத்தில் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில்.


xyzabc
ஜூன் 01, 2025 02:22

சரியாக சொன்னீர்கள் சிவம் அவர்களே. You can not compare ourselves with a terrorists country.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை