உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பைக்குகள், மது பானத்திற்கு வரி குறைக்க இந்தியா முடிவு

அமெரிக்க பைக்குகள், மது பானத்திற்கு வரி குறைக்க இந்தியா முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் கலிபோர்னியா வைன் ஆகியவற்றுக்கு வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடியாக வரி விதிக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இதனையடுத்து, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் கலிபோர்னியா வைன் ஆகியவற்றுக்கு வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இன்னும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரியை 50ல் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது, மேலும் வரியை குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.கடந்த காலத்தில் போர்பன் விஸ்கிக்கு விதிக்கப்பட்ட 150 சதவீத வரி 100 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனை மேலும் குறைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரிக் குறைப்பு மட்டும் அல்லாமல், அமெரிக்க மருந்து பொருட்கள் ஏற்றுமதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியாவில் வளர்ச்சியடைந்து வரும் மருந்துச் சந்தையில், தனது பங்கை அதிகரிக்க அமெரிக்கா விரும்புகிறது. அதேநேரத்தில் இந்தியாவும், தனது ஏற்றுமதிக்கு சாதகமான அம்சங்களை பெற நினைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
மார் 27, 2025 07:13

நான் கூட நம்மவரை நிஜமாகவே தைரியசாலி என்று தவறாக நினைத்து விட்டேன்!


Appa V
மார் 26, 2025 22:54

அமெரிக்க பைக்குகள் அஜித் விஜய் போன்ற நடிகர்கள் அல்லது செல்வந்தர்களுக்கு ஸ்டேட்டஸ் சிம்பல் ..நடுத்தர வர்க்கத்துக்கு கட்டுப்படியாகாது . அமெரிக்க மதுவகைகளை விட உள்ளூர் சரக்குகள் தான் பெரும்பாலோர் விரும்புவார்கள். வரியை குறைப்பதால் இவைகள் மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாது


M R Radha
மார் 27, 2025 17:11

அமெரிக்கா பைக்குகள் சாதாரண மக்களுக்கு ஏற்றவை அல்ல. ஓர் லிட்டர் பெட்ரோலுக்கு 5/6 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே கொடுக்கும். தவிர இவ்வையெல்லாம் ஷோ ரூம்களில் மட்டுமே சர்வீஸ் செய்ய முடியும். மைன்டெனன்ஸ் மிக அதிகம். இந்திய ரோடுகளுக்கு சரிப்பட்டு வராது.


சண்முகம்
மார் 26, 2025 22:27

குடிமக்களுக்கு கொண்டாட்டம். ஊத்து போர்பன் விஸ்கியை.


Ray
மார் 27, 2025 00:06

அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்​று குறிப்​பிட்டுள்​ளார்​. அகில இந்திய அளவில் அமெரிக்க மதுவுக்கு வரிக்குறைப்பாம். தமிழ்நாட்டில் மது ஒழிப்பாம். ஊருக்கு ஒரு வேஷம் கட்டுறாங்க மொதல்ல.. இந்த டாஸ்மாக்க ஒழிக்கணும்னு சொல்லி எத்தனை தருமிகள் மாங்கு மாங்குன்னு ஓடி ஓடி ஓட்டு கேட்கப் போறானுங்களோ.


ஆரூர் ரங்
மார் 26, 2025 22:26

அமெரிக்க பொருட்கள் இங்குள்ள மேல் நடுத்தர மக்களுக்குக் கூட கட்டுப்படியாகாத விலை. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காது. மற்றவர்களும் கெத்துக் காட்டுவதற்காக அன்னியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது நாட்டுக்கு செய்யும் சேவை.


பாமரன்
மார் 26, 2025 22:22

ஆக்சுவலா டாஸ்மாக்... அதாவது ஆடு ஸார் சொல்ற டாஸ்மார்க் இல்லை... டாஸ்மாக் விற்பனையை குறைத்து மக்களை காப்பாற்ற மற்றும் நம் நாட்டு பைக்குகள் அடிக்கடி ஆக்ஸிடென்ட் ஆகுறதால நவீன பைக்குகள் மூலமாக மக்களின் உயிரையும் காப்பாற்றும் நடவடிக்கையாதான் பார்க்கனும்... மேல் விவரங்களுக்கு சீனியர் பகோடா ரங்கிடு வருவாப்ல...


MARUTHU PANDIAR
மார் 27, 2025 00:05

நவீன பைக்குகளை அமெரிக்கா காரன் ஆக்சிடென்ட் ஆவாம யந்திரம் பொருத்தி அனுப்பி வைக்குறான்னு கண்டு பிடிச்சவன் பாமரானாக இருந்தாலும் பாராட்ட வேண்டும் ..பாமரன்களும் கடனோ உடனோ வாங்கி அமெரிக்க பைக்கு வாங்கி ஓட்டி மத்த எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பான்னு நம்பிக்கை வருது. பாமரன்னு சொல்லி ஒதுக்கக் கூடாது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை