உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராணுவத்துக்கு வாகனங்கள்; நேபாளம் நாட்டிற்கு இந்தியா வழங்கியது

ராணுவத்துக்கு வாகனங்கள்; நேபாளம் நாட்டிற்கு இந்தியா வழங்கியது

காத்மாண்டு: நேபாளம் சென்றுள்ள நம் வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டு ராணுவத்துக்கு, ராணுவ வாகனங்கள், மருத்துவ உபகரணங்களை ஒப்படைத்தார். நம் அண்டை நாடான நேபாளத்திற்கு, நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்தார். வரும், செப்டம்பர் 16, 17ம் தேதிகளில் இந்தியா வரும்படி பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அழைப்பு கடிதத்தையும் நேபாள பிரதமரிடம் விக்ரம் மிஸ்ரி அளித்தார். இதைத் தொடர்ந்து நேபாள ராணுவத் தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலை நேற்று சந்தித்தார். அப்போது இந்தியா சார்பில் இலகு ரக போர் வாகனங்கள், தீவிர சிகிச்சை மருத்துவ உபகரணங்களை ஒப்படைத்தார். இருநாட்டு படைகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவையும், வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கும் விதமாக அவை ஒப்படைக்கப்பட்டதாக மிஸ்ரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை