உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் ஹிந்து கோவில் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்

அமெரிக்காவில் ஹிந்து கோவில் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நியூயார்க்கில் உள்ள சுவாமி நாராயண் கோவிலை விஷமிகள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில், சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஹிந்து கோவில் எனவும், உலகின் 2வது மிகப்பெரிய கோவில் எனவும் சிறப்பை பெற்றுள்ளது. நியூயார்க்கில் இந்த கோயிலை தெரியாத மக்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cnxmyc8c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விசாரணை

இந்நிலையில், கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம். கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சமீப காலமாக நடந்து ஹிந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவில், கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களின் அக்கிரம செயல்பாடுகள் பதிவாகியுள்ளன.

அறக்கட்டளை கண்டனம்

அமெரிக்காவின் ஸ்வாமி நாராயண் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுக்லா கூறியதாவது: இந்த தாக்குதல் சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும். ஹிந்து கோவிலைத் தாக்குபவர்களின் கோழைத்தனத்தைப் புரிந்துகொள்வது கடினம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ramaswamy Vasudevan Srinivasan
செப் 18, 2024 01:45

பப்புவின் விளைவகல் என கருதலாம்?


ranjani
செப் 17, 2024 23:34

யாரைச் சொல்லுறீங்க பார் தீபா


வல்லவன்
செப் 17, 2024 22:26

அங்கு போனோமா அந்த நாட்டு சட்டப்படி வாழ்ந்தோமா என்று இருக்க வேண்டியதுதானே


Vignesh
செப் 17, 2024 17:29

காலிஸ்தான் குரூப்ஸ்


MADHAVAN
செப் 17, 2024 16:18

இந்தியாவில் நாங்கள் சர்ச் மற்றும் மசூதிகளை இடிப்போம் அம்பு விடுவோம் அதைப்பற்றி ஏங்க கேக்க கூடாது,


Barakat Ali
செப் 17, 2024 12:58

ஆனால் இந்தியாவில்தான் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று உலகளாவிய அளவில் உருட்டப்படுகிறது ......


N.Purushothaman
செப் 17, 2024 12:25

ஆதாரம் இல்லாமல் சும்மா அடிச்சி விடாதீங்க ....இந்தியாவுல இந்துக்களுக்கு தான் அநீதி நடக்குது ...


Srinivasan Krishnamoorthi
செப் 17, 2024 12:11

இந்து எழுச்சி அமெரிக்காவில் வருவதை சிலர் விரும்ப வில்லை


Indian
செப் 19, 2024 09:48

தமிழ்நாட்டில் இஸ்லாமிய எழுச்சி ஏற்படுவதை போல...


vijay
செப் 17, 2024 12:07

அமெரிக்க அரசியவியாதிகளுக்கு இந்தியாவை பழையபடி அடிமையாக வைத்திருக்க ஆசை. முன்னர் மௌன குரு பொருளாதார மேதை என்ற "பேசாத" சொன்னதை கேட்கும் கிளி கிடைத்தது. அந்த கிளியை கூண்டுக்குள் வைத்து சொன்னதை செய்யவைத்தது ராவுளு குடும்பம். 2014 -க்கு பிறகு அமெரிக்காவுக்கு கிடைத்தது நாட்டின் நலன் மற்றும் சுயமரியாதையை மீட்டெடுக்கும் தலைவன். மூன்றாம் முறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டு சக்திகளோடு கூட்டணி சேர்ந்தது யார் என்று நாட்டின் பெயர் கூட்டணியின் பெயராக வரும்படி வைத்துக்கொண்ட கும்பல்களின் பொய் பிரச்சாரங்கள், வீடு வீடாக சென்று நாங்கள் இவ்வளோ பணம் கொடுப்போம் என்று கையெழுத்து போட்ட நோட்டிசு விநியோகம், பிஜேபி-ஆர்.ஆர்.எஸ் இயக்கம் இவர்களின் இடையேயான பூசல், பிஜேபி கட்சியினரின் குருட்டு நம்பிக்கைகள் உ.பி, மராட்டியம், மேற்கு வங்கம் சில உள்ளடி வேலைகள் காரணமாக மெஜாரிட்டி இடங்களை பெறவில்லை. இருந்தும் பிஜேபி ஆட்சி அமைத்து விட்டது. மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் முக்கியமான சட்டதிட்டங்களை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. அதன் ஆற்றாமை, பொறாமை, வெறுப்பு ராவுளின் உள்நாட்டு, வெளிநாட்டு பேச்சுக்கள், வசவுகள், பொய்கள், வெறுப்பு பேச்சுக்கள், இந்தியாவின் பெருமையை குலைக்கும் செயல்களின் மூலம் அறியலாம். இரண்டு கடவுசீட்டுக்கள் வைத்திருப்பது மட்டுமில்லை, பொய் தகவல்கள் கொடுத்து இத்தனை வருடமாக இந்திய மக்களின் வரிப்பணத்தில் தின்று வாழ்ந்த வாழ்வு, ஊழல், சுருட்டு வேலைகள், நாட்டின் அமைதியை, சிறப்பை பொய்களின் ஆழமாகவும், வெறுப்பின் மூலமாகவும் குலைக்கும் ராவுளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து குடியுரிமையை பறித்து நாடுகடத்தவேண்டும்.


Ganapathy
செப் 17, 2024 12:03

ஒவ்வொரு முறை பெயிலு பப்பு அமெரிக்கா போகும்போது மட்டும் இது ஏன் நடக்குதுன்னா இவன் அங்கபோய் எல்லா முஸ்லிம் கிறிஸ்தவ கம்யுனிஸ்ட் தீவிவாதிகளையும் உசுப்பேத்தி ஹிந்துக்களுக்கு பேசுவதெல்லாம்எதிராக.