உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்

அமெரிக்க-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'அமெரிக்க-இந்தியா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்டார். பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.இந்நிலையில், அமெரிக்காவில், வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: இந்தியாவுடனான வரி பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. அமெரிக்க-இந்தியா வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். 90 நாள் வரி இடைநிறுத்தத்தின் போது ஆப்பிரிக்காவிற்குச் சென்று ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதை அறிவிக்க நாட்டின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஏப் 30, 2025 09:04

இவரு பேண்ட்டும் டையும் போடணும். அவர் வேட்டி , சட்டை போடணும். அப்பத்தான் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்னு ஒத்துக்கலாம்.


thehindu
ஏப் 30, 2025 08:58

அமெரிக்காவுக்கு முன்னெற்றம் .


பாமரன்
ஏப் 30, 2025 08:45

பெரிய வர்த்தக நாடுகளில் அமெரிக்க உடன் மட்டுமே நமக்கு ஏற்றுமதி சர்ப்ளஸ் உள்ளது... ஆப்பிள் ஃபோன் ஒரு முக்கிய காரணம்...‌அதையும் சரிக்கட்ட அவர்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் விலை அதிகம் மற்றும் இந்திய தரத்திற்கு / தேவைக்கு இல்லாமல் தூரத்தில் இருந்தாலும் பக்கத்தில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவில் சல்லிசா கிடைப்பதை விட்டுட்டு முக்கி முக்கி அமிரிக்கால இருந்து இம்போர்ட் பண்ணுறோம்.. அதன் பலனாக ஜனவரியில் உலக சந்தையில் பீப்பாய் என்பது டாலருக்கு மேல். இருந்து இப்போ கிட்டத்தட்ட அறுபது டாலருக்கு வந்தும் இந்திய மக்களுக்கு எண்ணெய் விலையை இறக்கி குழப்பாமல் இருக்கிறோம்... பகோடாஸ் டச் பண்ண விரும்பாத இந்த சப்ஜெக்ட்ல புரியாத விஷயம் என்னன்னா கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவீத விலை வீழ்ச்சி இருந்தது... மக்களுக்கு ஒத்த பைசா பெனி ஃபிட் போகாமல் பார்த்துக்கிட்டதும் ஓகே... ஆனால் அந்த கொள்ளை லாபம் எங்கய்யா போகுது? ஏன்னா போன வாரம் பெரும் சோகத்தை தாங்கிட்டு லிட்டருக்கு ரெண்டு ரூபா அதாவது மூன்று சதவீத வரி மட்டுமே போட்டாய்ங்க... அதான் கேக்குறேன்...‌என்னது இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை வைத்து தன் பங்க்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கும் சப்ளை பண்றது ரிலையன்ஸ் நிறுவனமா... ஓகே ஓகே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை