உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - அமெரிக்கா பேச்சு தொடக்கம்; விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு

இந்தியா - அமெரிக்கா பேச்சு தொடக்கம்; விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய அரசு வட்டார தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்தது. இந்த வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்பட்டுள்ளது. இது வர்த்தகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல், டிரம்ப்பின் இந்த செயல் உலக நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி, அமெரிக்க மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் கிளப்பியது. அடுத்தடுத்த வரி விதிப்புகளால் இருநாடுகளிடையே பரஸ்பரம் இருந்த நல்லுறவு சீர்கெட்டதுடன், அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் வரிவிதிப்பில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பிற உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சிகளை முழு வீச்சில் வர்த்தகத்துறை செய்து வருகிறது.இந்த நிலையில், வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டில்லி அரசு வட்டார தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பின் ஒரு பகுதி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஆக 28, 2025 15:27

இனிமே எது செஞ்சாலும் தேஷ்பக்தி சாயம் பூசிரலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 28, 2025 01:11

முறுக்கிட்டே இருக்குற மாதிரி எவ்வளவு தான் இருக்க முடியும்? முதலாளி நண்பர்கள் அழுத்தமும் இருக்குல்லே?


Priyan Vadanad
ஆக 27, 2025 21:00

பதிவிட்டிருக்கும் படம் பிரதமருக்கு பெருமை தருமா? அடிப்பொடி ஆழ்வார்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?


ராஜாராம்,நத்தம்
ஆக 27, 2025 21:31

மதமாறி அப்பம் உமக்கேன் எரிகிறது மாறி மாறி கருத்தை போட்டுக்கிட்டே இருக்க ரொம்ப எரிந்தால் போய் பினாயிலை குடி...


vivek
ஆக 27, 2025 21:43

காசுக்கு கூவும் ஆளு..மத்தபடி மண்டையில் ஒன்னும் இல்லை


Priyan Vadanad
ஆக 27, 2025 20:55

இந்த படத்தை பதிவிட்டு பிரதமரின் கட்டிப்பிடியிசத்தை பரப்புகிறீர்கள்.


Modisha
ஆக 27, 2025 21:48

போப் ஞாபகமா ?


Priyan Vadanad
ஆக 27, 2025 20:52

அலறுவது சுருதி மாறுது. கட்டிப்பிடி படத்தை பார்த்ததும் மலருவது அலறுகிறதோ? விதி.


naadodi
ஆக 27, 2025 21:33

பிரியரே ஏன் இப்படி பொரிகிறீர்


தாமரை மலர்கிறது
ஆக 27, 2025 20:20

பேசுவதை விட பேசாமல் இருப்பதே பெட்டர்


சமீபத்திய செய்தி