உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுவிஸ் வங்கிகளில் இந்தியர் டிபாசிட் 3 மடங்கு உயர்வு

சுவிஸ் வங்கிகளில் இந்தியர் டிபாசிட் 3 மடங்கு உயர்வு

ஜுரிச் :சுவிஸ் வங்கிகளில் இந்திய டிபாசிட் கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து, ரூ. 37,600 கோடி ஆனது. எனினும், இதில் பெரும்பாலான தொகை, வங்கிகள், நிதி நிறுவனங்களின் கணக்குகளிலேயே வந்திருப்பதாக சுவிஸ் நேஷனல் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.கடந்த ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகளில் டிபாசிட் 11 சதவீதம் மட்டுமே அதிகரித்து, மொத்தம் 3,675 கோடி ரூபாயாக இருந்தது.சுவிஸ் வங்கிகளில் உள்ள, மொத்த இந்திய டிபாசிட்களில் இந்திய தனிநபர்களின் பங்களிப்பு பத்தில் ஒரு பங்காக இருக்கிறது. 2006ல் இந்திய மொத்த டிபாசிட், 6.50 பில்லியன் ஸ்விஸ் பிராங்க் ஆக இருந்த நிலையில், 2011 முதல் 2023 வரை ஒரு சில ஆண்டுகளைத் தவிர்த்து, பெரும்பாலும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டே வந்துள்ளது.சுவிஸ் வங்கிகளில், அதிக தொகை வைத்துள்ள நாடுகள் வரிசையில், பிரிட்டன் முதலிடமும் அமெரிக்கா இரண்டாம் இடமும் மேற்கிந்திய தீவுகள் மூன்றாம் இடமும் வகிக்கின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், லக்ஸம்பெர்க், சிங்கப்பூர், யு.ஏ.இ., ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.Isaac
ஜூன் 20, 2025 16:49

ஏன் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்? இந்திய வங்கிகளில் நம்பிக்கை இல்லையா?


அப்பாவி
ஜூன் 20, 2025 06:52

அடுத்த நூறே நாளில் கொண்டாந்து ஆளுக்கு பாஞ்சி லட்சம் போடுவோம்.


J.Isaac
ஜூன் 20, 2025 12:56

ஆமாம், பத்து வருடத்திற்கு முன் சொன்னதை எல்லாம் இப்படிஞாபகப்படுத்தலாமா? இதற்கு தானே ஆங்கிலம் படிக்க கூடாது என்று சொல்லுகிறோம்


Mani . V
ஜூன் 20, 2025 05:03

திமுக வினர்தானே? கோபாலபுரம் குடும்பம், ஐந்து கட்சி அமாவாசை, வேலு, ரகுபதி, கண்ணப்பன், சாராயசாமி ஸாரி முத்துசாமி,...........


Gnana Subramani
ஜூன் 20, 2025 00:45

காங்கிரஸ் ஆட்சியில் தான் இது கருப்பு பணம். ஜீ ஆட்சிக்கு வந்த பின்னர் இது கருப்பு பணம் கிடையாது. டெபாசிட் மட்டும் தான்.


vadivelu
ஜூன் 20, 2025 07:17

எதுவுமே வெளி உலகத்திற்கு தெரிய நடந்தால் கருப்பு இல்லை.


Priyan Vadanad
ஜூன் 19, 2025 23:02

நமது பிரதமரின் நல்லாட்சியில் சுவிஸ் பேங்கில் மூன்று மடங்கு டெபாசிட் உயரும் அளவுக்கு அளவுக்கு நடுத்தர மக்களும் ஏழை மக்களும் இந்தியாவில் வளர்ந்து விட்டார்கள் என்று நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். அதுசரி சுவிஸ் பேங்கில் இருக்கும் பணத்தினால் நமது நாட்டுக்கு எந்த நன்மை என்று பத்திரிக்கை நிருபர்கள் எழுதினால் அல்லது ஒருசில தேசப்பற்றாளர்கள் எழுதினால் நல்லது.


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2025 22:54

பிஜேபி ஆட்சியில் இந்தியா பிரமாண்ட வளர்ச்சி காண்கிறது. இதனால் லட்சம் ரூபாய் என்பது ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. கோடி என்பது லட்சமாகிவிட்டது. ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் வளர்ச்சி உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சியை பறைசாற்றுகிறது. மெச்சப்படவேண்டிய விஷயம்.


J.Isaac
ஜூன் 20, 2025 12:51

இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் தினமும் மூன்று வேளை உணவில்லாமல் இருக்கிறார்கள், 42% இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை இல்லாமல் அலைகிறார்கள் என்ற ஆய்வறிக்கை தகவல் தெரியுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை