உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுவிஸ் வங்கிகளில் இந்தியர் டிபாசிட் 3 மடங்கு உயர்வு

சுவிஸ் வங்கிகளில் இந்தியர் டிபாசிட் 3 மடங்கு உயர்வு

ஜுரிச்:சுவிஸ் வங்கிகளில் இந்திய டிபாசிட் கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து, 37,600 கோடி ரூபாய் ஆனது. எனினும், இதில் பெரும்பாலான தொகை, வங்கிகள், நிதி நிறுவனங்களின் கணக்குகளிலேயே வந்திருப்பதாக சுவிஸ் நேஷனல் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.கடந்த ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகளில் டிபாசிட் 11 சதவீதம் மட்டுமே அதிகரித்து, மொத்தம் 3,675 கோடி ரூபாயாக இருந்தது.சுவிஸ் வங்கிகளில் உள்ள மொத்த இந்திய டிபாசிட்களில் இந்திய தனிநபர்களின் பங்களிப்பு பத்தில் ஒரு பங்காக இருக்கிறது. 2006ல் இந்திய மொத்த டிபாசிட் 6.50 பில்லியன் ஸ்விஸ் பிராங்க் ஆக இருந்த நிலையில், 2011 முதல் 2023 வரை ஒரு சில ஆண்டுகளைத் தவிர்த்து, பெரும்பாலும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டே வந்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் அதிக தொகை வைத்துள்ள நாடுகள் வரிசையில் பிரிட்டன் முதலிடமும், அமெரிக்கா இரண்டாம் இடமும், மேற்கிந்திய தீவுகள் மூன்றாம் இடமும் வகிக்கின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், லக்ஸம்பெர்க், சிங்கப்பூர், யு.ஏ.இ., ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 20, 2025 05:40

37,600 கோடி ரூபாய்கள் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் இருந்து என்ற விபரத்தை வெளியிட்டால் குன்றிய நாடு முதலிடம் வகிக்க வாய்ப்புகள் அதிகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை